Diploma in Micro Finance 2021/2022
நுண்நிதியியல் டிப்ளோமா கற்கைநெறி – 2022/2023
முகாமைத்துவக் கற்கைகள் வணிகபீடத்தினால் நடாத்தப்படும் நுண்நிதியியல் டிப்ளோமா கற்கைநெறிக்கான விண்ணப்பங்கள் தகுதிவாய்ந்த விண்ணப்பதாரிகளிடமிருந்து கோரப்படுகின்றன.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் – இலங்கை
முகாமைத்துவக் கற்கைகள் மற்றும் வணிக பீடம்
நுண்நிதியியல் டிப்ளோமா கற்கைநெறி – 2022/2023 (அணி – VI)
முகாமைத்துவக் கற்கைகள் வணிகபீடத்தினால் நடாத்தப்படும் நுண்நிதியியல் டிப்ளோமா கற்கைநெறிக்கான விண்ணப்பங்கள் தகுதிவாய்ந்த விண்ணப்பதாரிகளிடமிருந்து கோரப்படுகின்றன.
கற்கைநெறிக்கான காலம் : ஒரு வருடம் (இரண்டு அரையாண்டுகள்) வார இறுதி நாட்கள்
கற்பிக்கப்படும் மொழி: தமிழ்
விண்ணப்பிப்பதற்கான தகுதி:
விண்ணப்பதாரி கீழ்வரும் தகுதிகளில் ஏதாவது ஒன்றினைக் கொண்டிருத்தல் வேண்டும்.
- க.பொ.த உயர்தரப் பரீட்சையில் 03 பாடங்களிலும் சித்திகளைப் பெற்றிருத்தல் வேண்டும்.
- தேசியத் தொழில்தகைமை மட்டம் – 4 இனை நிறைவுசெய்திருத்தல் வேண்டும்.
- யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மூதவையாலும், முகாமைத்துவ கற்கைகள் வணிகபீடத்தின் பீட சபையாலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வேறு ஏதேனும் தகுதிகள் அல்லது அனுபவத்தினை கொண்டிருத்தல் வேண்டும்.
கற்கைநெறிக்கான முதலீடு – ரூபா 60,000
கட்டண விபரம் :
- அனுமதிப்பத்திரக்கட்டணம் – ரூபா 1,000
- பதிவுக்கட்டணம்/ புதுப்பித்தல் கட்டணம் – ரூபா 2,000
- கல்விக் கட்டணம் – ரூபா 51,000
- பரீட்சைக் கட்டணம் – ரூபா 5,000
- நூலகக் கட்டணம் (திரும்பப் பெறத்தக்கது) – ரூபா 1,000
- மொத்தம் – ரூபா 60,000
விண்ணப்ப முடிவுத் திகதி – 30.05.2023
விண்ணப்பிக்கும் முறை:
முகாமைத்துவக் கற்கைகள் வணிகபீடத்தின் இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட நிகழ்நிலை விண்ணப்பத்தினூடாக விண்ணப்பம் செய்யலாம்.
மேலதிக தொடர்புகளுக்கு : 021 222 3610
பதிவாளர்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்