2015 ஆம் ஆண்டின் உயர் தரம் எழுதி 2017/2019 ஆம் கல்வியாண்டிற்கான தேசிய கல்வியியல் கல்லூரி டிப்ளோமாவை நிறைவு செய்த சுமார் 4000 மாணவர்களுக்கான ஆசிரியர் நியமனங்களை விரைவில் வழங்குமாறு இலங்ைக ஆசிரியர் சேவை சங்கம் கல்வி அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
சங்கத்தின் தலைவர் மகிந்த ஜயசிங்க, கல்வி அமைச்சருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இக்கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த தாமத்தின் மூலம் பாடசாலைக் கட்டமைப்பில் ஆசிரியர் பற்றாக்குறை தீவிரமடைந்துள்ளதாக சுட்டிக் காட்டியுள்ள சங்கம், இவர்களுக்கான நியனமங்களை உடனவடியாக வழங்கவேண்டியது கல்வி அமைச்சினதும் தேசிய கல்வி நிறுவகத்தினதும் பொறுப்பாகும் என்று சுட்டிக் காட்டியுள்ளது.
அத்தோடு, உயர் தரத்தின் பின்னர் மாணவர்களை உள்ளீர்ப்புச் செய்வதில் நிலவும் தாமதம் மற்றும் உள்ளீர்ப்புச் செய்யப்பட்ட மாணவர்களுக்கான கற்கைக் காலத்தை காரணமின்றி நீடித்தல் என்பன கல்வித் துறையில் பாரிய பிரச்சினைகளை உருவாக்கும் என்று சங்கம் எச்சரித்துள்ளது.