பாடசாலை பெண் அதிபர் ஒருவரை மண்டியிட்டதாக தொடுக்கப்பட்ட வழக்கில் இருந்து ஊவா மாகாண முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான சாமர சம்பத் தசநாயக்க விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த வழக்க (15ஆம் திகதி) பதுளை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
பதுளை தமிழ் மகளிர் கல்லூரியின் அதிபர் பவானி ரகுநாதன் செய்த முறைப்பாட்டுக்கு அமைய பதுளை பொலிஸாரால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில் இந்த வழக்கை மத்தியஸ்த சபைக்கு அனுப்புமாறு நீதவான் அண்மையில் உத்தரவிட்டார்.
இதன்படி, பதுளை மத்தியஸ்த சபைக்கு அழைக்கப்பட்ட போது இரு தரப்பினரும் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளனர்.
இதன்படி, சாமர சம்பத் தசநாயக்க நிரபராதியாகி விடுவிக்கப்படுவதாக நீதவான் சமிந்த கருணாதாச தெரிவித்தார்.
எனினும் அதிபர் பவானி ரகுநாதன் இன்று நீதிமன்றில் முன்னிலையாகவில்லை என தெரிவிக்கப்படுகிறது.