வடமேல் மாகாண சபைக்காக e மனிதவள முகாமைத்துவ கட்டமைப்பு ஒன்றை (e-HRM) தயாரிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கமைவாக தற்பொழுது பொதுவான வகையில் மேற்கொள்ளப்படும் மாகாண சபைக்கு உட்பட்ட நிறுவனங்களின் மனித வள முகாமைத்துவ பணிகள் (Online) இணையத்தள முறையில் மிகவும் பயனுள்ளதாகவும் மற்றும் செயற்றின் மிக்கதாகவும் முன்னெடுக்க முடியும்.
இதற்கான தொழில்நுட்ப ஒத்துழைப்பு மற்றும் ஆலோசனைகள் இலங்கை தபால் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்தினால் வழங்கப்படுகின்றன.
இதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை இலங்கை தபால் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்தில் (ICTA) கடந்த 29 ஆம் திகதி கைச்சாத்திடப்பட்டது. முதல் கட்டத்தின் கீழ் முக்கிய 6 கட்டங்களை அடிப்படையாக கொண்டு இந்த முகாமைத்துவ கட்டமைப்பு தயாரிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.