இலங்கை தமிழ் கல்வித் துறை சார்ந்த தகவல்களையும் செய்திகளையும் தொடர்ச்சியாக வழங்கிவரும் நாம், கல்வித் துறை சார் வாசிப்புக்கான வாய்ப்பை பரவலாக்குவதற்கு முயற்சிக்கின்றோம்.
அதன் ஒரு கட்டமாக, கல்வித் துறை சார் கட்டுரைகளை அதிகம் வெளியிடுவதற்கு தீர்மானித்துள்ளோம்.
நீங்களும் கல்வித் துறை சார்ந்த எழுத்தாளர்களாக இருப்பின் எம்மோடு இணைந்து கொள்ளுங்கள்.
கட்டுரைகள் பின்வரும் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்திருக்க வேண்டும் என எதிர் பார்க்கிறோம் .
1. சொந்தப் படைப்பாக இருக்க வேண்டும்.வேறு எங்கும் இதற்கு முன்னர் பிரசுரிக்கப்படாதவையாக இருக்க வேண்டும்.
2. கல்வியியல் சார்ந்தவையாக இருக்க வேண்டும்.
3. உரிய முறையிலான உசாத்துணையிடல் பாணிகள் பின்பற்றப்பட்டிருக்க வேண்டும்.
4. கட்டுரைகள் யுனிகோட் எழுத்துருவில் தட்டச்சு செய்யப்படல் வேண்டும். படங்கள், அட்டவணைகள் தெளிவாக இமேஜ் ஆக அனுப்பப்படல் வேண்டும்.
5. கட்டுரைகள் மூன்று – ஐந்து பக்கங்களில் அமைந்திருக்கலாம்.
6. கட்டுரைகளை 0702115763 எனும் வட்சப் இலக்கத்திற்கு அனுப்பி வைக்க முடியும்.
மேலே தரப்பட்டுள்ள நிபந்தனைகளைப் பேணி எழுதப்பட்டு பிரசுரத்திற்கு தெரிவு செய்யப்படும் ஒவ்வொரு எழுத்தாளரினதும் இரண்டாவது கட்டுரை முதல் ஒவ்வொரு கட்டுரைக்கும் ஊக்குவிப்புக்காக சிறிய கொடுப்பனவு ஒன்றை வழங்குவதற்கு நாம் தயாராக இருக்கிறோம் என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகிறோம்.