பாடசாலைகளை எதிர்வரும் திங்கட்கிழமை மீண்டும் ஆரம்பிப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. அந்த வாரம் தரம் 11, 12, 13 ஆகிய வகுப்புகளை ஆரம்பிப்பதோடு, அவ்வகுப்புகளுக்கான கற்பித்தலை 3.30 வரை மேற்கொள்ளும் வகையில் நேர மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தரம் 11, 12, 13 வகுப்புகளுக்கான பாடங்கள் வழங்கப்பட்டுள்ள மற்றும் கோவிட்19 நிலமை சார்ந்து வழங்கப்பட்டுள்ள விசேட பணிகளுக்குப் பொறுப்பான ஆசிரியர்கள் தவிர்ந்த வேறு ஆசிரியர்கள் பாடசாலைக்கு சமூகமளிக்கக் கூடாது என கல்வி அமைச்சு நேற்று அறிவித்திருந்தது.
அத்தோடு, ஏனைய வகுப்புகளுக்கான கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் எதிர்வரும் ஓகஸ்ட் 10 ஆம் திகதி முதல் ஆரம்பமாகும் எனவும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இது தொடர்பான விரிவான வழிகாட்டல் அறிக்கை ஒன்றை கல்வி அமைச்சு இன்று வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.