இதன் கீழ் முதல்கட்டத்தில் கிழக்கு மாகாணத்தில் ஆரம்பிக்கப்படவுள்ள பாடசாலைகளை தூய்மைப்படுத்தும் நடவடிக்கை தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதுதொடர்பில் கிழக்கு மாகாண பிரதம நிகழ்வு நேற்று திருகோணமலை சிங்கள மகா வித்தியாலயத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத்தின் பங்களிப்புடன் நடைபெற்றது.
பாடசாலை சூழலை மிகத்தூய்மையாகவும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது அதிபர்களின் பொறுப்பாகும் என்றும் இதற்கு பெற்றோர் உட்பட பழைய மாணவர்கள் தமது பங்களிப்பை வழங்க வேண்டும் என்று கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா குறிப்பிட்டதுடன் பாடசாலை வளாகத்தையும் பார்வையிட்டார்.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண பிரதம செயலாளர் துசித பி வணிகசிங்க இகிழக்கு மாகாண கல்வியமைச்சின் செயலாளர் ஐ.கே.ஜி.முத்துபண்டா உட்பட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.