வடமாகாணத்தில் இயங்கும் திணைக்களங்களில் பணியாற்றும் உத்தியோகத்தர்களுக்கான பயிற்சிகளை வழங்கும் நோக்கோடு 123 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சி அலகு இன்று திறந்துவைக்கப்பட்டுள்ளது.
வடமாகாண ஆளுனர் திருமதி பி.எஸ்.எம் சார்ள்ஸ் முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சி அலகிற்காக கட்டிடத்தினை திறந்துவைத்தார்.
கிளிநொச்சி மாவட்டம் கனகபுரம் பிரதேசத்தில் மேற்படி முகாமைத்துவ அலகானது நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் வடமாகாண பிரதம செயலாளர், மாகாணசபை அமைச்சுக்களின் செயலாளர்கள் ,கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் திணைக்கள அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
-அரச தகவல் திணைக்களம்-