பல்கலைக்கழக அனுமதி – இராமநாதன் நுண்கலைத்துறை
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் இலங்கை
இராமநாதன் நுண்கலைத்துறை
பல்கலைக்கழக அனுமதி – 2019/2020
உளச்சார்புப் பரீட்சை (Aptitude Test)
இசையில் (கௌரவ) இளநுண்கலைமாணி
நடனத்தில் (கௌரவ) இளநுண்கலைமாணி
சித்திரமும் வடிவமைப்பில் (கௌரவ) இளநுண்கலைமாணி
மேற்படி நான்கு வருடபட்டப் படிப்புக்கற்கைநெறிகளுக்கு அனுமதி பெறவிரும்பும் தகுதியான விண்ணப்பதாரிகளிடமிருந்து 10.07.2020 ஆம் திகதி வரை விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும்.
அனுமதிக்கான பொது நிபந்தனைகளும் தகைமைகளும் அனுமதிக்கான தகைமைகள் சங்கீதம், நடனம், சித்திரமும் வடிவமைப்பும் கற்கைநெறிகளில் யாதேனுமொன்றைத் தெரிவு செய்வதற்கு விரும்பும் விண்ணப்பதாரிகள் 2019 ஆண்டு நடைபெற்ற க.பொ.த (உ.த) பரீட்சையில் சித்தியடைந்து இருப்பதுடன் தெரிவு செய்யவிரும்பும் பட்ட பாடநெறிக்குரிய பாடத்தில் அதாவது; கர்நாடக சங்கீதம் அல்லது நடனம் – பரதம் அல்லது சித்திரக்கலையில் ஆகக் குறைந்தது திறமைச்சித்தியும் (C), மற்றைய இரண்டு பாடங்களிலும் ஆகக் குறைந்தது சாதரணதரச் சித்தியும் (S) பெற்றிருத்தல் வேண்டும்.
தகுதிகாண் பரீட்சை ஆற்றுகை/ உளச்சார்பு பரீட்சை
மேற்குறித்த கற்கைநெறி அனுமதிக்கான விண்ணப்பதாரிகள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும் ஆற்றுகைப் பரீட்சை/ உளச்சார்பு பரீட்சைக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தோற்றுதல் வேண்டும்.
- சங்கீதம், நடனம் – ஆற்றுகை பரீட்சை
- சித்திரமும் வடிவமைப்பும் – எழுத்துப்பரீட்சையுடன் செய்முறை மற்றும் உளச்சார்பு பரீட்சைகள்
விண்ணப்பங்களை சமர்ப்பித்தல்
விண்ணப்பதாரிகள் www.jfn.ac.lk என்ற யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இணையத் தளம் ஊடாக தத்தமது விண்ணப்பங்களை ஒன்லைன் மூலம் ( Online) விண்ணப்பிக்க வேண்டும். அதன் பின்னர், விண்ணப்பித்த பிரதிகளை பதிவிறக்கம் செய்து அதில் கையெழுத்திட்டு தபால் மூலமோ அல்லது நேரடியாகவோ தகுதிகாண் பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
சித்திரமும் வடிவமைப்பும் கற்கைநெறிக்கு தோற்றும் விண்ணப்பதாரிகள் ரூபா 1000/= பரீட்சைக்கான கட்டணமாக செலுத்த வேண்டும்.
மேற்படி தகுதிகாண் பரீட்சைக்கான விண்ணப்பத்துடன் ரூபா. 500 ஐ ஏதாவது ஒரு மக்கள் வங்கிக் கிளையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மக்கள் வங்கிக் கிளைக் கணக்கு இல. 162100160000880 இல் செலுத்திப் பெற்ற பற்றுச்சீட்டுடன் பாடசாலை அதிபர் அல்லது சமாதான நீதவானால் உறுதிப்படுத்தப்பட்ட க.பொ.த (உ.த) பெறுபேற்றுப் பத்திரத்தினது போட்டோப் பிரதியும் அனுப்பப்படல் வேண்டும். பரீட்சைப் பெறுபேற்றில் அல்லது பெயரில் மாற்றங்கள் ஏதும் இருப்பின் அதற்குரிய சத்தியக்கடதாசி சமர்ப்பிக்கப்பட்டு உறுதிசெய்யப்பட வேண்டும்.
பிரவேச அனுமதித் தகைமையைப் பூர்த்தி செய்துள்ள விண்ணப்பதாரிகளுக்கு ஆற்றுகைஃ நேர்முகப் பரீட்சைக்குரிய அனுமதி அட்டை அனுப்பி வைக்கப்படும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் யாவும் 10.07.2020 ஆம் திகதிக்கு முன்னதாக பிரதிப்பதிவாளர் ,அனுமதிகள் கிளை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், யாழ்ப்பாணம் எனும் முகவரிக்கு கடித உறையின் இடதுபக்க மேல் மூலையில் விண்ணப்பிக்கும் கற்கை நெறியைக் குறிப்பிட்டு பதிவுத்தபால் மூலம் அல்லது நேரில் சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.
அனுமதிக்குரிய ஆகக்குறைந்த தகைமையை கொண்டிராததும், பணம் செலுத்திய பற்றுச்சீட்டு சமர்ப்பிக்கப்படாததும், பெறுபேற்று பத்திரங்களின் உறுதி செய்யப்பட்ட போட்டோ பிரதிகள் இணைக்கப்படாததும், விண்ணப்ப முடிவுத்திகதிக்குள் கிடைக்கப் பெறாததுமான விண்ணப்பங்கள் யாவும் நிராகரிக்கப்படும்.
மேலதிக விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் 021 222 6714.
பதிவாளர்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.