இணைய வசதியுடைய அல்லது இல்லாத எந்தவொரு தொலைபேசியையும் பயன்படுத்தி கட்டணமின்றி வீட்லிருந்தவாறே எனது பாடசாலை ஆசிரியர்களிடம் கல்வி கற்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க கல்வி அமைச்சுடன் டயலொக் ஆஸியாட்டா நிறுவனம் இணைந்துள்ளது.
அதற்கமைய, கல்வி அமைச்சின் 1377 என்ற தொலைபேசி இலக்கத்தின் மூலம் ஒரே தடவையில் 45 மாணவர்களை இணைத்துக்கொண்டு கற்பித்தல் செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு ஆசிரியர்களுக்கு வாய்ப்பளிக்க படவுள்ளது.
இந்த வேலைத்திட்டத்துக்கான கணினி மென்பொருள், டயலொக் ஆஸியாட்டா நிறுவனத்தின் வழங்கப்பட்டுள்ளது.
இதன் முதல் கட்டமாக நாட்டின் அனைத்து மாகாணங்களிலும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 100 பாடசாலைகளுக்கு இந்த வேலைத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் ஆரம்ப நிகழ்வு நேற்று (28) கல்வி, விளையாட்டுதுறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் டலஸ் அழகப்பெருமவின் தலைமையில் கல்வியமைச்சில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் டயலொக் ஆஸியாட்டா நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சுபுன் வீரசிங்க உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.