தேசிய கல்வியியல் கல்லூரிகளில் பயிற்சியை முடித்த 4547 பயிலுனர்களுக்கு இன்னமும் நியமனம் வழங்கப்படவில்லை என இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
இதற்கு மேலதிகமாக பயிற்சியை முடித்துள்ள 7826 பேருக்கு இன்னமும் பிரயோக பயிற்சியை வழங்க தாமதமாகியுள்ளதாகவும் ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோஸப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
2015 ஆம் ஆண்டு உயர் தரம் எழுதி 4547 பேர் மூன்று வருட பயிற்சிக்காக 2016 இல் கல்வியியல் கல்லூரிகளுக்கு உள்ளீர்க்கப்பட்டவர்கள் வழமையான அடிப்படையில் பயிறச்ியை முடிநத்து நியமனம் வழங்கப்பட்டிருக்க வேண்டும்.
பாடசாலைகளில் சுமார் 30000 வெற்றிடங்கள் காணப்படும் பின்னணியில் இவர்களை இன்னமும் நிரந்தர நியமனம் வழங்கி சேவையில் உள்ளீர்க்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
கல்வியியல் கல்லூரிக்கு உள்ளீர்க்கப்படும் அனைவரும் வேறு பாடநெறிகளைத் தொடர்மாட்டோம் என ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்ளவது கட்டாயம். இதனடிப்படையில் பயிற்சியை முடித்திருப்பினும் இவர்கள் வேறு தொழில்களுக்கு செல்லமுடியாத இக்கட்டான சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
எனவே இவர்களை ஆசிரியர் சேவையில் உள்ளீர்ப்பதற்கு மிக விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
2016, 2017 ஆம் ஆண்டுகளில் உள்ளீர்க்கப்பட்டவர்களுக்கு விரைவில் பிரயோகப் பயிற்சி வழங்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், 2019, 2020 இல் உயர் தரம் தோற்றியவர்களை விரையில் உள்ளீர்ப்புச் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.