புதிதாக கட்டடம் ஒன்றை நிர்மானிப்பதற்காக எனத் தெரிவித்து, வத்தலவில் உள்ள ஒரு பிரபல பெண்கள் பாடசாலையின் உயர் நிர்வாகம் ஒவ்வொரு மாணவரிடமும் ரூபா 5000 சேகரிக்கும் திட்டத்தை ஆரம்பித்துள்ளதாக தெரியவருகிறது.
கொரோனா வைரஸ் காரணமாக நாட்டில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியால், சில பெற்றோர்கள் வேலைகளைக் கூட இழந்துவிட்டனர். இத்தகைய சூழ்நிலையில், சில பெற்றோர்களிடம் இதற்குமுன்னர், ரூபா 2000 ஒவ்வொரு மாணவரிடமும் வசூலித்துள்ளது.
ஈஸ்டர் தாக்குதலில் பின்னர், பாடசாலை சுவரை உயர்த்துவதாகக் கூறியே இதற்கு முன்னர், பணம் சேகரிக்கப்பட்டுள்ளது.
பெற்றோருக்கு கூடுதல் சுமையைச் சேர்க்கத் தயாராக இல்லை என கல்வி அமைச்சர் அண்மையில் குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது