இளம் பராய சிறுவன் ஒருவனை கடுமையான பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டுள்ள குற்றச்சாட்டின் பேரில் ஹிகுரக்கொட பொலிசார் ஆசிரியை ஒருவரைக் கைது செய்து நீதி மன்றில் ஆஜர் படுத்தியுள்ளனர்.
ஹிகுரக்கொட கல்வி வலயத்தின் பாடசாலை ஒன்றினது ஆசிரியையே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
நீத மன்றில் ஆஜர் படுத்தப்பட்ட ஆசிரியை எதிர்வரும் 22 ஆம் திகதி (நாளை) வரை தடுப்புக்காவலில் வைக்குமாறு நீதிபதி சனத் நானயக்கார கட்டளையிட்டுள்ளார்.
இந்த ஆசிரியை தாம் கடமை புரியும் பாடசாலையைச் சேர்ந்த மாணவன் ஒருவனை மாத்தளை பகுதி ஒன்றில் இரகசியமாக வீடொன்றில் தடுத்து வைத்திருந்த போது பொலிசார் கைது செய்துள்ளனர். குறித்த வீட்டில் வைத்து சிறுவன் கடுமையான வகையில் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிசார் நீதி மன்றில் தெரிவித்தனர்.
சிறுவன் நீதி மன்ற வைத்திய அறிக்கைகை்காக பொலன்நறுவை வைத்திய சாலைக்கு ஒப்படைக்குமாறு நீதிபதி கட்டளையிட்டார்.