தேசிய கல்வியியல் கல்லூரிகளின் கட்டுறுப் பயிலுனர்களுக்கான உள்ளகப் பயிற்சியை திட்டமிடப்பட்ட காலத்திற்கு முன்னர் முடிப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
JULY மாதம் வரை நீடிப்பதற்குத் திட்டமிடப்பட்டிருந்த பயிற்சியை JUNE மாதம் 15 ஆம் திகதியோடு முடிவுக்கு கொண்டுவருமாறு கல்வி அமைச்சு தேசிய கல்வியியல் கல்லூரிகளின் பீடாதிபதிகளுக்கு அறிவித்துள்ளது.
மாணவர்கள் இது வரை மேற்கொண்டுள்ள செயற்றிட்டங்களின் அடிப்படையில் புள்ளிகள் வழங்கப்பட்டு இம்மாதம் 30 ஆம் திகதிக்கு முன்னர் மதிப்பீட்டுக்கு குழுவிற்கு சமர்பிக்குமாறு கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
அதே நேரம் இரண்டாம் வருட மாணவர்களின் கட்டுறுப் பயிற்சியை ஜீன் மாதம் ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இப்பயிற்சிக்காக தாம் இணைந்து கொள்ளக் கூடிய தமக்கு மிகவும் வசதியான பாடசாலை தொடர்பான தகவல்களை கல்வியியல் கல்லூரி நிர்வாகம் சேகரிக்கின்றது.