சப்ரகமுக மாகாண ஆளுனர் மாகாண ஊழியர்களின் சம்ளத்தின் ஒரு நாள் கொடுப்பனவை மாகாண கோவிட் 19 நிதியத்திற்கு கட்டாயமாக பெற்றுக் கொள்ளும் வகையில் மேற்கொண்டுள்ள தீர்மானத்தை நிறுத்துமாறு இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
மாகாண ஊழியர்களின் ஒரு நாள் சம்பளத்தை பெற்றுக் கொள்ளுவதற்கான முயற்சியை ஆளுனர் மேற்கொண்டுள்ளதாகவும் அதனை நிறுத்துமாறும் ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது்
சப்ரகமுக மாகாண கல்விச் செயலாளர் திருமதி ஏ.டப்ளியு ருக்மனி ஆரியரத்ன வின் கையொப்பத்தத்துடன் 2020.04.06 ஆம் திகதியிடப்பட்ட சப்ரகமுக மாகாண கல்விப் பணிப்பாளர் மற்றும் அனைத்து வலயத் கல்விப் பணிப்பாளர்களுக்கும் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில், கொரோனா காரணமாக ஏற்பட்டுள்ள நிலமையைக் கருத்திற் கொண்டு நிவாரணம் வழங்குவதற்காக உருவாக்கப்பட்டுள்ள நிதியத்திற்கு பங்களிக்கும் வகையில் சப்ரகமுக மாகாண ஆளுனர் உட்பட மாகாண சபை தீர்மானித்துள்ளதாகவும்
அரச ஊழியர்களிடம் அறவிடக் கூடிய வகையில் மாகாண சமூக சேவை நிதியத்தின் பணத்தை வழங்கியுள்ளதாகவும், எனவே, குறித்த நிதியை மாகாண ஊழியர்களின் ஜீலை மாத சம்பளத்தின் ஒரு நாள் கொடுப்பனவை அறிவிடுமாறும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக ஸ்டாலின் ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.