பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கான திட்டம் தயார் செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் டலஸ் அலகபெரும தெரிவித்தார். நேற்று கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும
சுவர்ணவாஹினி தொலைக் காட்சியின் கோரானவின் பின்னரான இலங்கை என்ற தலைப்பில் இடம் பெற்ற நேரலை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தார்.
மே 11 பாடசாலை கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிப்பது தற்போதைய சூழ்நிலையில் அது சாத்தியப்படாது. அடுத்து வரும் நாட்களில் சுகாதார துறையினருடன் கலந்துரையாடி பாடசாலை ஆரம்பிப்பு திகதி அறிவிக்கப்படும். பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கான தீர்மானம் அரசியல் தீர்மானமில்லை. அமைச்சரவைத் தீர்மானமுமல்ல. அது சுகாதாரத் துறையின் தீர்மானமாக அமையும் என்று அவர் விளக்கினார்.
இதன் போது பாடாசலைகளை மீள ஆரம்பிப்பதற்கான திட்டத்தை அவர் விளக்கினார்.
முதலில் அதிபர் ஆசிரியர்கள் பாடசாலைக்கு வரவழைக்கப்படுவர், ஒரு வாரத்தின் பின் (உ/த), (சா/த) மாணவர்கள் உள்வாங்கப்படுவர், பின் ஆரம்ப பிரிவு மாணவர்கள் உள்வாங்கப்படுவர். இந்த ஒழுங்கு முறையிலேயே பாடசாலைகளை ஆரம்பிக்க எதிர்பார்க்கிறோம். என்றார்.
உரிய ஏற்பாடுகள் நிறைவடைந்தததன் பின்னர் பொருத்தமான திகதி அறிவிக்கப்படும் என அவர் தெரிவித்தார்