பாடசாலைகளை தனிமைப்படுத்தல் நிலையங்களாகப் பயன்படுத்த எந்தத் தீர்மானமும் மேற்கொள்ள வில்லை என இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஊடகங்களில் வெளியான செய்திகளை இராணுவத்தளபதி நிராகரித்துள்ளார்.
தெரண தொலைக்காட்சியின் காலை நேர நிகழ்ச்சி ஒன்றில் கருத்துத் தெரிவித்த இராணுவத் தளபதி இப்போது எந்தத் தீர்மானமும் மேற்கொள்ள வில்லை அதே போல் இதன் பிறகும் பாடசாலைகளை தனிமைப்படுத்தல் நிலையங்களாக பயன்படுத்த தீர்மானிக்கப் போவதுமில்லை எனத் தெரிவித்தார்.
தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு தேவையான அடிப்படை வசதிகளை பாடசாலைக் கட்டமைப்பு கொண்டிருக்க வில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
எனினும், கொரோனா தடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இராணுவத்தினரை தங்க வைப்பதற்காக குறிப்பிட்ட சில பாடசாலைகளைப் பயன்படுத்துவதாக, பாடாசலைகளில் இராணுவத்தினர் காணப்படுகின்றனரே என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போது அவர் தெரிவித்தார்.
கொழும்பு றோயல் கல்லூரி உட்பட பிரபலமான பாடசாலைகளை கொரோனா தனிமைப்படுத்தல் நிலையங்களாக பயன்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.