நாட்டின் தற்போதைய நிலையை கருத்திற்கொண்டு, நாட்டிலுள்ள அனைத்துப் பாடசாலைகளையும் உடனடியாக மூட வேண்டும் இலங்கை அதிபர் சங்கத்தின் செயலாளர் பியசிறி பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
கொரனா வைரஸ் பரவல் காரணமாக மாணவர்களின் பாதுகாப்புக் கருதி, நோய் தொற்றுக்குள்ளான மாணவர்கள் உள்ள வகுப்பறைகள் மூடப்பட்டுள்ளதாக இலங்கை அதிபர் சங்கத்தின் செயலாளர் பியசிறி பெர்ணான்டோ மேலும் தெரிவித்துள்ளார்.
நாட்டிலுள்ள பாடசாலைகளை உடனடியாக மூடாவிட்டால், சாதாரண தரம், உயர்தரம் ஆகிய பரீட்சைகளுக்கு தோற்றவுள்ள மாணவர்கள் பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேரிடும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.