தென் மாகாணத்திற்குட்பட்ட அனைத்து அரச நிறுவனங்களினதும் பணிகளை நாளை (20) ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்ட பின்னர் ஆரம்பிப்பதற்கான அடிப்படை ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு நிறுவனங்களின் செயலாளர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக தென் மாகாண ஆளுனரின் செயலாளர் திலீகா குடாச்சி தெரிவித்துள்ளார்.
நாளை முதல் அரச நிறுவனங்களின் பணியணியினரில் 50 வீதமானோரை கடமைக்கு அழைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.