இலங்கையின் பாராளுமன்றக் கட்டத்தொகுதியை கொரோனா தனிமைப்படுத்தல் நிலையமாகப் பயன்படுத்த வேண்டும் என முன்னாள் பாராளுன்ற உறுப்பினர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ரத்னசிரி விக்ரமசிங்கவின் மகனான விதுர, பிரமர் வாழ்ந்த வீட்டை தனிமைப்படுத்தல் நிலையமாகப் பயன்படுத்துவதற்கு வழங்கி தனது பெருந்தன்மையை காண்பித்திருந்தார்.
அண்மையில் ஹொரன பிரதேசத்தில் இடம்பெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது தற்போதைய நிலையில் பாராளுன்றையும் தனிமைப்படுத்தல் நிலையமாகப் பயன்படுத்த வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.