பல்கலைக்கழக மாணவர்களுக்கு இலவச இணைய வசதி
பல்கலைக்கழகங்களில் ஈ லேர்னிங் முறைமையில் பதிவு செய்துள்ள மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளைத் தடையின்றி தொடர்வதற்கு தேவையான இணைய வசதியை இலவசமாக வழங்குமாறு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச அவர்கள், தொலை தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவிற்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
குறிப்பிட்ட மாணவர்களின் விபரங்களை பல்கலைக்கழக நிர்வாகங்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினூடாக தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவிற்கு அனுப்புவைத்துள்ளது.
இத்திட்டத்தை நாளை முதல் ஆரம்பிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக, தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ஓஷத சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலை சுமுகமாகும் வரை இலவச சேவையை வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
How to register for e-learning