கொவிட் 19 எனப்படும் புதிய கொரோனா வைரஸ் உட்பட மேலும் சில வைரஸ் தொற்றுகளை அடையாளம் காணும் பீ.ஆர்.சி இயந்திரம் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் சுகாதார அமைச்சிற்கு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.
விஜயராமையில் அமைந்துள்ள கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தில் முன்னாள் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி அவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்வு 2020.03.11 இடம்பெற்றுள்ளது.

இந்த நிகழ்வில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களுடன், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களும் மற்றும் டப்ல்யூ.டீ.ஜே.செனவிரத்ன, எஸ்.எம்.சந்திரசேன ஆகியோர் கலந்துக் கொண்டு சிறப்பித்துள்ளனர்.
3000 டொலர் பெறுமதியில் கொரியாவில் தயாரிக்கப்பட்ட இந்த வைரஸ் தொற்றுகளை அடையாளம் காணும் இயந்திரத்தினால் குறுகிய நேரத்திற்குள் வைரஸ் தொற்றினை அடையாளம் காணமுடியும்.
இது இலகுவாக கொண்டு செல்ல கூடிய சிறிய இயந்திரமாக இருப்பது விசேட அம்சமாகுவதுடன், பிரதமருக்கு கிடைத்த தனிப்பட்ட பரிசாகும்.

அரச தகவல் திணைக்களம்