இஸ்லாமிய சமயக் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மூடுமாறு கல்வி நிலையங்களின் பொறுப்பாளர்களுக்கும் நம்பிக்கை சபைகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம் சமயப் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் இது தொடர்பான அறிவித்தலை விடுத்துள்ளார்.
மக்தப், குர்ஆன் மத்ரஸா, ஹிப்ழ் மத்ரஸா, அஹதிய்யாப்பாடசாலைகள் மற்றும் அறபுக் கல்லூரிகள் அனைத்தையும் மறு அறிவித்தல் வரை மூடுமாறு பணிப்பாளர் விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வதிவிட கற்கை கொண்ட அறபுக் கல்லூரிகள் பிரதேசத்தின் பொதுச் சுகாதார அதிகாரியின் அறிவுறுத்தலின் படி தீர்மானத்தை மேற்கொள்ள முடியும் எனத் தெரிவித்துள்ள பணிப்பாளர்,
வதிவிட கற்கை கொண்ட அறபுக் கல்லூரிகளை மூடாதிருக்க தீர்மானிப்பின் போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுவது கட்டாயமானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.