பட்டதாரிகள் 45585 பேருக்கான நியமனக் கடிதங்கள் அரச நிர்வாக உள்நாட்டலுவல்கள் மற்றும் மாகாண சபை மாகாண பரிபால உள்ளுராட்சி அமைச்சின் செயலாளரினால் வினியோகிகப்பட்டுள்ளது.
நியமனம் கிடைக்கும் அனைத்து பட்டதாரி பயிலுனர்களும் தமக்குரிய பிரதேச செயலக செயலாளரிடம் நியமனக் கடிதங்கள் பெற்றுக்கொண்டமையை உறுதிப்படுத்துவதோடு, அவர் உங்களை அவருக்கு கீழுள்ள நிலையமொன்றுக்கு அனுப்புவார். அங்கு உங்களுக்கு பயிற்சி வழங்கப்படும் அதே வேளை முதல் குழுவில் தெரிவு செய்யப்பட்டவர்கள் குறிப்பிட்ட பிரதேசத்தில் இரு மாதங்கள் பயிற்சி பெறுவர்.
இரண்டாம் குழுவினர் குறிப்பிட்ட சேலை நிலயத்தில் மத் து கடமைகள் தொடர்பாக இரண்டு மாதங்கள் ஆராய்ந்து தமது சேவை நிலையத்தை முன்னேற்றுவது தொடர்பாக அறிக்கைகள் தயாரிப்பர். முதல் குழு தலைமைத்துவ பயிற்சியை முடித்து சேவை நிலையத்திற்கு வந்து இரண்டு மாதங்கள் தமக்கான கடமைகள் தொடர்பாக ஆராய்ந்து சேவை நிலையத்தை முன்னேற்றுவது தொடர்பான அறிக்கையை முன்வைப்பர்.
அறிக்கையை நிறைவு செய்த இரண்டாம் குழுவினர் இரண்டு மாத தலைமைத்துவ பயிற்சியில் பங்கேற்பர். பின்னர் இரு குழுக்களும் தொழில் வழிகாட்டல் பயிற்சியில் பங்கேற்பர். 2021. மார்ச் 1 முதல் அனைத்து பயிலுனர்களுக்கும் குறித்த நிலையத்தில் நிரந்தர நியமனம் வழங்கப்படும்.
நியனம் பெறும் அனைவரும் அருகிலுள்ள இலங்கை வங்கி, மக்கள் வங்கி, தேசிய சேமிப்பு வங்கி அல்லது பிரதேச அபிவிருத்தி வங்கியில் கணக்கொண்றை ஆரம்பித்து அதன் விபரங்களை பிரதேச செயலாளருக்கு வழங்க வேண்டும்.
இதன்படி, பயிற்சிக் காலத்தில் மாதாந்தம் 20000 ரூபா உங்கள் கணக்கிற்கு வைப்பிலிடப்படும். பயிற்சிக் காலத்தில் முதல் இரு மாதங்களிலும் தயாரிக்கப்படும் அறிக்கைக்கு ஏற்ப கிராம மற்றும் குறைந்த வளங்கள் கொண்ட பிரதேசத்தை விருத்தி செய்வதற்காக 2020 வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட எதிர்பார்ப்பதனால், அனைத்து பயிலுனர்களும், தமது சேவை நிலையத்தில் சேவை செய்பவர்கள் மற்றும் பிரதேச மக்களுடன் கருத்துக்களைப் பரிமாறி தமது நடவடிக்கைகளை முன்கொண்டு செல்ல வேண்டும்
ஜனாதிபதியின் ஊடக பிரிவு
2020.03.04
தமிழ் மொழி பெயர்ப்பு – ஜே.ஜே, Teachmore.lk