01.வடக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களில் வாழும் கடன் சுமையினால் பாதிக்கப்பட்டுள்ள பொது மக்களுக்கு நுண் நிதி கடன் வசதிகளை வழங்கும் வேலைத்திட்டத்தை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்துதல்.
பல்வேறு நுண் நிதி நிறுவனங்களில் கடனைப் பெற்றுக்கொண்டுள்ள கிராமத்தில் குறைந்த வருமானங்களைக் கொண்ட பயனாளிகளை இந்த கடன் சுமையில் இருந்து மீட்டெடுப்பதற்காக கூட்டுறவு கிராமிய வங்கி மற்றும் சிக்கன மற்றும் கடன் கொடுப்பனவுகளை மேற்கொள்ளும் கூட்டுறவு சங்கங்கள் ஊடாக கடன் ஆலோசனை முறை ஒன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கடன் ஆலோசனை முறையை நடைமுறைப்படுத்துவதற்காக தற்பொழுது 542 மில்லியன் ரூபா திரைச்சேரியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதுடன் தற்பொழுது இந்த கடன் ஆலோசனை முறையை நடைமுறைப்படுத்தும் நிதி செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்த திட்டத்தின் அடிப்படை நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக தொடர்ந்தும் இதன் செயற்பாட்டு நிதியத்தின் மூலம் சம்பந்தப்பட்ட கடன் வேலைத்திட்டத்தை தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்துவதற்கும், இதன் கீழ் தற்பொழுது வழங்கப்படும் ஆகக் கூடிய கடன் வரையறையை ஒரு நபருக்காக 60,000 ரூபா வரையில் அதிகரிப்பதற்கு நிதி, பொருளாதார மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சர் என்ற ரீதியில் கௌரவ பிரதமர் அவர்கள் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
02.வெளிநாட்டில் பணியாற்றும் இலங்கையர்களுக்காக சமூக பாதுகாப்பு நிதியத்தை அமைத்தல்.
02.வெளிநாட்டில் பணியாற்றும் இலங்கையர்களுக்காக சமூக பாதுகாப்பு நிதியத்தை அமைத்தல்.
ஒரு மில்லியனுக்கு மேற்பட்ட இலங்கையர்கள் வெளிநாடுகளில் தொழில் வாய்ப்புக்களில் ஈடுபட்டுள்ளதுடன், தற்பொழுது நாட்டுக்கு வெளிநாட்டு நாணயத்தை பெற்றுத்தரும் முக்கிய மூல வளமாக இந்த வெளிநாட்டு பணியாளர்கள் திகழ்கின்றனர். அவ்வாறு இருந்த போதிலும் வெளிநாட்டு பணியாளர்கள் மற்றும் அவர்களில் தங்கியுள்ளோரின் சமூக பாதுகாப்புக்காக ஏதேனும் தொகையை சேமிப்பதற்கு முடியாதுள்ளதுடன் இதன் காரணமாக அவர்களுக்கு ஓய்வூதிய வயதை எட்டிய பின்னர் பொருளாதார சிரமங்களை எதிர்கொள்வது அவதானிக்கப்பட்டுள்ளது. இதற்கு தீர்வாக ஷஷசௌபாக்கிய தொலைநோக்கு என்ற தேசிய கொள்கையின் மூலம் வெளிநாடுகளில் உள்ள பணியாளர்களுக்கு பங்களிப்பு செய்யக்கூடிய ஓய்வூதிய கொடுப்பனவு முறையை ஆரம்பிப்பதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதற்கு அமைவாக வெளிநாடுகளில் உள்ள பணியாளர்களுக்கு பங்களிப்பு செய்யக்கூடிய சமூக பாதகாப்பு நிதியம் ஒன்றை ஆரம்பிப்பதற்காக திருத்த சட்ட மூல வரைபை மேற்கொள்வதற்கு தேவையான அடிப்படை திருத்த சட்டமூலத்தை வகுப்பதற்கு விடேச நிபுணர்களைக் கொண்ட குழு ஒன்றை அமைப்பதற்காக திறனாற்றல் அபிவிருத்தி, தொழில் பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் தொடர்புகள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த புதிய பரிந்துரைக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
03.பெருங்கடலில் கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள வள்ளங்களை கண்காணிப்பதற்கும் ஐInternational Maritime satellite service (INMARSAT) என்ற சேவையை பெற்றுக்கொள்வதற்குமாக இலங்கை ட்ரெலிகொம் நிறுவனத்தின் மூலம் வழங்கப்படும் INMARSAT என்ற சேவையை(Point of service activation – PSA பெற்றுக்கொள்ளுதல்.
03.பெருங்கடலில் கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள வள்ளங்களை கண்காணிப்பதற்கும் ஐInternational Maritime satellite service (INMARSAT) என்ற சேவையை பெற்றுக்கொள்வதற்குமாக இலங்கை ட்ரெலிகொம் நிறுவனத்தின் மூலம் வழங்கப்படும் INMARSAT என்ற சேவையை(Point of service activation – PSA பெற்றுக்கொள்ளுதல்.
இந்துமா சமுத்திர டுனா ஆணைக்குழுவின் சட்ட விதிகளுக்கு அமைவாக சர்வதேச கடற்றொழிலில் ஈடுபடும் அனைத்து பல்லின வள்ளங்களுக்காக செய்மதி தொழில்நுட்பத்தின் மூலம் நடைமுறைப்படுத்தப்படும் வள்ளங்களை கண்காணித்தல் கட்டமைப்பு ஒன்றை ஏற்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் ஐரோப்பிய ஒன்றியத்தின் சட்ட விதிகளுக்கு அமைவாக ஐரோப்பிய ஒன்றியத்துக்கு மீன்களை ஏற்றுமதி செய்யும் நாடுகள், வள்ளங்களின் பாதுகாப்பு கட்டமைப்பு உறுதி செய்யப்பட்டிருத்தல் வேண்டும். இதற்கு அமைவாக கடற்றொழில் நீரியல் வள திணைக்களத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள சர்வதேச கடற்றொழிலில் ஈடுபட்டுள்ள 1500 பல்லின நாளாந்த கடற்றொழில் வள்ளங்களுக்காக 1500 ட்ரான்ஸ்போன்டர்கள் அரசாங்கத்தின் பங்களிப்புடன் வழங்கப்பட்டுள்ளது. இந்த ட்ரான்ஸ்போன்டர்களுக்கான செய்மதி சேவைகளை வழங்குவதற்கான ஒப்பந்தம் தற்பொழுது பூர்த்தி அடைந்துள்ளதுடன் இந்த சேவையை தொடர்ந்தும் இலங்கை ட்ரெலிகொம் நிறுவனத்தின் ஊடாக வழங்குவதற்காக 13.5 மில்லியன் மானியத்தை ஒதுக்கீடு செய்வதற்காக கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் அவர்கள் வழங்கிய பரிந்துரைக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
04.சுகாதார மற்றும் சுதேசிய வைத்திய சேவை அமைச்சின் செயலாளர் மற்றும் St.oudy Pediatrics என்ற சிறுவர் நோய் தொடர்பான ஆய்வு வைத்தியசாலைக்கு இடையில் கைச்சாத்திடப்பட்ட St.oudy சர்வதேச அமைப்பின் வைத்திய நிறுவனத்தின் அங்கத்துவத்துக்கான ஒப்பந்தம்.
04.சுகாதார மற்றும் சுதேசிய வைத்திய சேவை அமைச்சின் செயலாளர் மற்றும் St.oudy Pediatrics என்ற சிறுவர் நோய் தொடர்பான ஆய்வு வைத்தியசாலைக்கு இடையில் கைச்சாத்திடப்பட்ட St.oudy சர்வதேச அமைப்பின் வைத்திய நிறுவனத்தின் அங்கத்துவத்துக்கான ஒப்பந்தம்.
இலங்கையில் ஒரு வருடத்தில் புற்றுநோயினால் பாதிக்கப்படும் 600 ற்கு மேற்பட்ட சிறுவர்கள் தேசிய புற்றுநோய் நிறுவனத்தின் சிறுவர் நோய் பிரினால் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். நாட்டில் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டுள்ள சிறுவர்களின் குணமடையும் எண்ணிக்கை பிராந்திய நாடுகள் மற்றும் சர்வதேசத்தில் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் சிறப்பான மட்டத்தில் இருந்த போதிலும் இந்த நிலையை மேலும் மேம்படுத்துவதற்கு மேலும் சந்தர்ப்பம் இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இதற்காக சிறுவர் தொடர்பில் சிகிச்சைகளை மேற்கொள்வதைப் போன்று உலகலாவிய வைத்திய நிறுவன வலைப்பின்னலான St.oudy சர்வதேச அமைப்புடன் ஒன்றிணைந்து செயற்படுவதன் மூலம் சிறுவர் புற்றுநோய் சிகிச்சையை மேம்படுத்துவதற்கு சந்தர்ப்பம் இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இதற்கு அமைவாக, St.oudy சர்வதேச அமைப்பில் அங்கத்துவ நிறுவனத்துடன் தொடர்புபடுவதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கையை மேற்கொள்வதற்காக சுகாதாரம் மற்றும் சுதேசிய வைத்திய சேவை அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
05.அமரதேவ மடாலயத்தை நிர்மாணிக்கும் பணிகள்.
05.அமரதேவ மடாலயத்தை நிர்மாணிக்கும் பணிகள்.
கலாநிதி பண்டித் அமரதேவவினால் இசைத்துறைக்கு மேற்கொள்ளப்பட்ட அளப்பரிய தேசிய பணியை கௌரவிக்கும் வகையில் ஷஷஅமரதேவ அசப்புவ’ என்ற பெயரில் காப்பகம் ஒன்று அமைக்கப்படுகின்றது. அருங்காட்சியகம் மற்றும் நூல் நிலையம் ஆகியவற்றைக் கொண்ட இசை மடாலயம் ஒன்று ஷஷபத்தரமுல்லை அப்பேகம’ என்ற வளவில் அமைப்பதற்கு தற்பொழுது பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் நிர்மாணப்பணிகள் ஒப்படைக்கப்பட்டிருந்த நிறுவனத்தின் செயற்பாடுகள் எதிர்ப்பார்த்த மட்டத்தில் இல்லாததன் காரணமாக சம்பந்தப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நிர்மாணப்பணிகளை துரிதமாக பூர்த்தி செய்யக்கூடிய வகையில் பொருத்தமான நிறுவனம் ஒன்றை அரசாங்கத்தின் முறையான பெறுகைக்குழுவின் செயற்பாடுகளை கடைப்பிடித்து தெரிவு செய்வதற்காக தகவல் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
06.பல்கலைக்கழகங்களுக்கான அனுமதியைப் பெறும் மாணவர்களுக்காக வழங்கப்படும் ஷமகாபொலஷ புலமைப்பரிசில் தொகை அதிகரித்து இந்த புலமைப்பரிசிலுக்கான எண்ணிக்கையை விரிவுப்படுத்துதல்.
06.பல்கலைக்கழகங்களுக்கான அனுமதியைப் பெறும் மாணவர்களுக்காக வழங்கப்படும் ஷமகாபொலஷ புலமைப்பரிசில் தொகை அதிகரித்து இந்த புலமைப்பரிசிலுக்கான எண்ணிக்கையை விரிவுப்படுத்துதல்.
குறைந்த வருமானங்களைக் கொண்ட குடும்பங்களின் பல்கலைக்கழக கல்விக்கான சந்தர்ப்பத்தை கொண்டுள்ள மாணவர்களுக்கும், விசேட பெறுபேறுகளைப் பெறும் மாணவர்களுக்கும் மாதாந்தம் நிதி உதவி வழங்குவதற்காக ஷஷமகாபொல புலமைப்பரிசில்’ வேலைத்திட்டம் 1982 ஆம் ஆண்டில்’ ஆரம்பிக்கப்பட்டது. இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான மானியம் ஷஷமகாபொல புலமைப்பரிசில் அறக்கட்டளை’ இனால் மாதாந்தம் பல்கலைக்கழகங்களுக்கு வழங்கப்படுகின்றது. தற்பொழுது பல்கலைக்கழக பிரவேசத்துக்கான உரிமையைப் பெற்றுள்ள 30,000 மாணவர்களில் சுமார் 15,000 பேருக்கு மகாபொல புலமைப்பரிசில் வழங்கப்படுகின்றது. இந்த எண்ணக்கையை 20,000 வரை அதிகரிப்பதற்கும், தற்பொழுது மாதாந்தம் செலுத்தப்படும் புலமைப்பரிசில் தொகையை அதிகரிக்கக்கூடிய வகையில் அறக்கட்டளையின் தற்போதைய நிதி தொகையாக 10.5 பில்லியன் ரூபாவை 2025 ஆம் ஆண்டளவில் 20 பில்லியன் ரூபாவாக அதிகரிப்பதற்காக அடையாளம் காணப்பட்டுள்ள மூலோபாய பிரயோகத்தின் கீழ் விசேட வேலைத்திட்டங்கள் சிலவற்றை நடைமுறைப்படுத்துவதற்காக உயர் கல்வி, தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
07.வட்டி இல்லா மாணவர் கடன் பரிந்துரைக்காக எதிர்ப்பார்க்கப்பட்ட வகையில் மாணவர்கள் உள்வாங்கப்படாமை மற்றும் மாணவர்கள் கற்கை நெறிகளை கைவிட்டு செல்கின்றமை தொடர்பான அறிக்கை.
07.வட்டி இல்லா மாணவர் கடன் பரிந்துரைக்காக எதிர்ப்பார்க்கப்பட்ட வகையில் மாணவர்கள் உள்வாங்கப்படாமை மற்றும் மாணவர்கள் கற்கை நெறிகளை கைவிட்டு செல்கின்றமை தொடர்பான அறிக்கை.
அரசு அல்லாத உயர் கல்வி நிறுவனங்களில் அரசாங்கத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பட்டப்படிப்பு கற்கை நெறியைத் தொடர்வதற்காக 2017 ஆம் ஆண்டு தொடக்கம் வட்டியில்லா மாணவர் கடன் பரிந்துரை முறை ஆரம்பிக்கப்பட்டது. தற்பொழுது 3 கட்டங்களின் கீழ் 3731 மாணவர்களுக்கு இதில் கடன் வசதிகள் வழங்கப்பட்டுள்ளதுடன் அவர்களுள் 202 மாணவர்கள் பல்வேறு காரணங்களின் அடிப்படையில் கற்கை நெறியைக் கைவிட்டு சென்றுள்ளனர். இந்த வேலைத்திட்டத்தை மேலும் விரிவுப்படுத்துவதன் மூலம் பொருளாதார சிரமங்களினால் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு நிவாரணத்தை வழங்குவதற்கும், எதிர்காலத்தில் இந்த வேலைத்திட்டத்தின் கீழ் ஆக கூடுதலான தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்துவதற்கான கற்கை நெறிகளுக்கு முக்கியத்துவம் வழங்குவதற்காக உயர் கல்வி, தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
08.INNOTECH 2020 – என்ற தொழில்நுட்பம் மற்றும் புத்தாகக் கண்காட்சி
08.INNOTECH 2020 – என்ற தொழில்நுட்பம் மற்றும் புத்தாகக் கண்காட்சி
சமூகத்தில் அனைத்து ஸ்திரமான விஞ்ஞான தொழில்நுட்ப மேம்பாட்டை முன்னெடுத்தல் மற்றும் உயர் கல்வி, தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சின் கீழ் உள்ள பல்கலைக்கழக ஆய்வு மற்றும் அபிவிருத்தி பிரிவின் கண்டுபிடிப்புக்களை காட்சிப்படுத்தும் நோக்கில் இந்த அமைச்சினால் INNOTECH 2020′ – தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க கண்காட்சி என்ற பெயரில் கண்காட்சி ஒன்று 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11 ஆம் திகதி தொடக்கம் 15 ஆம் திகதி வரையில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு அமைவாக சம்பந்தப்பட்ட தரப்பினரின் ஒத்துழைப்புடன் இந்த கண்காட்சியை ஹோமாகம, பிட்டிபன என்ற இடத்தில் நடத்துவதற்காக உயர் கல்வி தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
09.ஹெல சுவைய என்ற நச்சுத்தன்மை அற்ற பாரம்பரிய நெல் உற்பத்தி
09.ஹெல சுவைய என்ற நச்சுத்தன்மை அற்ற பாரம்பரிய நெல் உற்பத்தி
பாரம்பரிய நெல் உற்பத்தி வகைகளைப் பயன்படுத்தி இரசாயன உரம் மற்றும் கிருமி நாசினிகளைப் பயன்படுத்தாது நெல் உற்பத்தி வேலைத்திட்டம் ஒன்றை அரசாங்கத்தின் வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பங்களிப்புடன் ஷஷஹெல சுவைய’ என்ற அமைப்பின் மூலம் அநுராதபுரம் மாவட்டத்தில் இராஜாங்கனை பிரதேசத்தை அடிப்படையாக கொண்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த நெல்லின் மூலம் தயாரிக்கப்படும் அரசி மற்றும் அந்த அரசியுடன் தொடர்புபட்டதாக தயாரிக்கப்படும் உணவைப் பயன்படுத்துவதன் மூலம் தொற்றா நோயினால் பாதிக்கப்படும் பெரும்பாலானோரை அதில் இருந்து மீட்க மூடியும் என்று அவதானிக்கப்பட்டுள்ளது. இந்த விடயங்களைக் கவனத்தில் கொண்டு உத்தேச திட்டமாக அநுராதபுரம் இராஜாங்கனை பிரதேசத்தில் 2000 விவசாயிகள் 10,000 வயற் காணியில் ஷஷஹெல சுவைய’ என்ற விவசாயத்தில் ஈடுபடுவதற்காக மகாவலி, விவசாயம், நீர்ப்பாசனம் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
10.தேசிய வங்கியினால் நிதி உதவி வழங்கப்படும் (LBFP) என்ற திட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்காக தற்பொழுது உள்ள மானியத்தைப் பயன்படுத்தி மிக விரைவாக மேம்படுத்துவதற்கு முன்னெடுக்கக்கூடிய தெரிவு செய்யப்பட்ட தேசிய பெரு வீதி பகுதியை மேம்படுத்துதல்.
2011 ஆம் ஆண்டு தொடக்கம் திரைச்சேரியின் பிணையின் அடிப்படையில் உள்;ளுர் வங்கிகள் பெற்றுக்கொள்ளும் கடன் நிதியைப் பயன்படுத்தி வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் வீதிகளைப் புனரமைக்கும் திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டம் தற்பொழுது 2 கட்டங்களின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதுடன் இந்த 2 கட்டங்களுக்கு அங்கீகரிக்கப்பட்டுள்ள கடன் தொகையில் மேலும் 1580 மில்லியன் ரூபாh வரையில் எஞ்சும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு அமைவாக அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்டுள்ள ‘ஒரு இலட்சம் கிலோமீற்றர் மாற்று வீதி கட்டமைப்பை’ நடைமுறைப்படுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ் மிக விரைவில் மேம்படுத்தப்பட வேண்டிய மாற்று வீதி அபிவிருத்திக்காக இந்த எஞ்சிய நிதியைப் பயன்படுத்துவதற்காக வீதி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
11. தெற்கு அதிவேக நெடுஞ்சாலை நீண்ட திட்டத்திற்காக காணிகள் பெற்றுக்கொள்ளப்பட்டமையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சுயமாற்று கொடுப்பனவை வழங்குதல்.
11. தெற்கு அதிவேக நெடுஞ்சாலை நீண்ட திட்டத்திற்காக காணிகள் பெற்றுக்கொள்ளப்பட்டமையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சுயமாற்று கொடுப்பனவை வழங்குதல்.
2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 18 ஆம் திகதிக்கு முன்னர் தெற்கு அதிவேக நெடுஞ்சாலை விரிவுபடுத்தும் திட்டத்திற்காக கணிகளைப் பெற்றுக்கொண்டதனால் பாதிக்கப்பட்ட பிரதேச சபை எல்லைப்பகுதிக்குள் தமது காணி உரிமையாளர்களுக்கு சுயமாற்று கொடுப்பனவாக 150,000.00 ரூபா கொடுப்பனவாக வழங்கப்பட்டுள்ளது. இந்த கொடுப்பனவு நவம்பர் மாதம் 18 ஆம் திகதிக்கு பின்னர் 500,000 ரூபாவாக இது திருத்தி அமைக்கப்பட்டது. இதன் காரணமாக ஆரம்ப சந்தர்ப்பத்தில் காணிகள் பெற்றுக்கொள்ளப்பட்டதினால் பாதிக்கப்பட்ட 175 காணி உரிமையாளர்களுக்கு சம்பந்தப்பட்ட சுயமாற்று கொடுப்பனவை 500,000 ரூபா வரையில் அதிகரிப்பதற்காக வீதி மற்றும் போக்குவரத்து அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
12. நுண், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழிற்துறையினருக்கு தேவையான சேவைகளை ஒரே இடத்தில் பெற்றுக்கொடுப்பதற்கான சேவை மத்திய நிலையம் (One Stop shop) அமைத்தல்.
12. நுண், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழிற்துறையினருக்கு தேவையான சேவைகளை ஒரே இடத்தில் பெற்றுக்கொடுப்பதற்கான சேவை மத்திய நிலையம் (One Stop shop) அமைத்தல்.
நாட்டின் தேசிய உற்பத்தியில் 52 சதவீத பங்களிப்பை வழங்கியுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ள நுண், சிறிய மற்றும் மத்திய தரத்திலான தொழிற்துறையின் மூலம் 3 மில்லியனுக்கு மேற்பட்ட பொது மக்கள் வாழ்வாதாரத்தை வழங்குவதுடன், அது நாட்டின் மொத்த தொழிலில் 45 சதவீதமாகும். வர்த்தக சேவையை வழங்குவதற்காக நடத்தப்படும் நிறுவன நடைமுறைக்கு அமைவாக ஒரே பணிகள் பல்வேறு நிறுவனங்களின் மூலம் மேற்கொள்ளுதல் மற்றும் பாரிய அளவிலான காலத்தை செலவிடுவதினால் இந்த தொழிற்துறையினர் சிரமங்களுக்கு உள்ளாவதாக அவதானிக்கப்பட்டுள்ளது. இதனால், நாட்டின் 25 மாவட்டங்களை அடிப்படையாக கொண்டு ஒரே இடத்தில் சேவையை வழங்கக்கூடிய 25 மத்திய நிலையங்களை ஆரம்பிப்பதற்கும், மாவட்ட செயலகங்களினால் ஏனைய சம்பந்தப்பட்ட அரசாங்க நிறுவனங்கள் மற்றும் ஏனைய சம்பந்தப்பட்ட தரப்பினரின் ஒத்துழைப்புடன் இந்த சேவை மத்திய நிலையங்களை நடைமுறைப்படுத்துவதற்கும், நிர்வாக சபை ஒன்றின் மூலம் இந்த சேவை மத்திய நிலையங்களின் முகாமைத்துவத்தை மேற்கொள்வதற்காக சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழிற்துறை மற்றும் தொழிற்துறை அபிவிருத்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
13. ஒபட்ட ரட்டக் – ரட்;டட்ட ஹெட்டக் – சுப்பிரிசிது வெடபீமக் – வெடகரண ரட்ட தெயக் என்ற தொனிப்பொருளின் கீழ் சிரமதான வேலைத்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்துதல்.
13. ஒபட்ட ரட்டக் – ரட்;டட்ட ஹெட்டக் – சுப்பிரிசிது வெடபீமக் – வெடகரண ரட்ட தெயக் என்ற தொனிப்பொருளின் கீழ் சிரமதான வேலைத்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்துதல்.
‘சௌபாக்கிய தொலைநோக்கு’ தேசிய கொள்கை பிரகடனத்தில் குறிப்பிட்ட வகையில் ஒபட்ட ரட்டக் – ரட்டட்ட ஹெடக் என்ற தொனிப்பொருளின் ஊடாக பொது மக்கள் நாட்டுப்பற்று அரச சேவையை ஏற்படுத்துவதற்காக பயனுள்ள சேவை சுற்றாடலை முன்னெடுக்கும் பணியாளர் சபை உள்நோக்கத்தை ஏற்படுத்தும் முக்கியத்துவம் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதற்கு அமைவாக இலங்கை போக்குவரத்து சபை ரயில்வே திணைக்களம், இலங்கை மின்சார சபை, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம், மின்சார சபை மற்றும் எரிசக்தி அமைச்சு மற்றும் போக்குவரத்து சேவை முகாமைத்துவ அமைச்சுக்கு உட்பட்டதாக உள்ள ஏனைய நிறுவனங்களின் சேமநல சங்கம் மற்றும் பயனுள்ள குழுக்களின் பங்களிப்புடன் அரசாங்கத்தின் செலவு இன்றி 2020 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி அன்று ஒரு நாள் சிரமதான வேலைத்திட்டத்தை மேற்கொள்வதற்கும் இந்த வேலைத்திட்டத்தை மூன்று மாதங்களுக்கு ஒரு முறை நடத்துவதற்கு மின் சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் மற்றும் போக்குவரத்து சேவைகள் முகாமைத்துவ அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த ஆலோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
14.அரசாங்கத்தின் காணிகளை முகாமைத்துவம் செய்யும் பணிகளை துரிதப்படுத்துவதற்கான வேலைத்திட்டம்.
14.அரசாங்கத்தின் காணிகளை முகாமைத்துவம் செய்யும் பணிகளை துரிதப்படுத்துவதற்கான வேலைத்திட்டம்.
அரசாங்கத்துக்கு காணி வரி செலுத்துவோர் சிரமங்களுக்கு உள்ளாகாத வகையில் சம்பந்தப்பட்ட வரி வாடகையை அறவிடுவதற்காக தளர்வு மற்றும் வசதியான முறை ஒன்றை தயாரிப்பதற்காக சிபாரிசுகளை தயாரிப்பதற்காக 2019 டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி நடத்தப்பட்ட அமைச்சரவை கூட்டத்தில் குழு ஒன்று அமைப்பதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது. இதற்கு அமைவாக அக் குழுவினால் சமர்ப்பிக்கப்பட்ட கீழ் கண்ட சிபாரிசுகளை நடைமுறைப்படுத்துவதற்காக காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த பரிந்துரைகளுக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
வரி செலுத்துவோரினால் அறவிடப்பட வேண்டியுள்ள தண்டப்பணத்தை தள்ளுபடி செய்தல்.
நிலுவை வரிப்பணத்தை செலுத்துவதற்காக வரி செலுத்துவோருக்கு ஒரு வருட நிவாரண காலத்தை வழங்குதல்.
வருடாந்தம் வரிப்பணத்தை 4 காலாண்டுகளில் செலுத்துவதற்காக அவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்குதல்.
வருடாந்தம் வரிப்பணம், வரி கால எல்லையில் ஆரம்ப மாதம் நிறைவடைவதற்கு முன்னர் செலுத்தப்பட வேண்டிய வரி செலுத்துவோருக்கு 10 சதவீத கழிவை வழங்குதல்.
தபால் அலுவலகம், கடனட்டை, கையடக்க தொலைபேசி, யுpp போன்ற நடைமுறைகள் மூலம் வரியை செலுத்துவதற்காக வசதிகளைச் செய்து கொடுத்தல்.
15. இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையில் பதிவு செய்யப்பட்டுள்ள சுற்றுலா நிறுவனங்களுக்காக சுற்றுலா அபிவிருத்தி வரியை செலுத்தும் கால எல்லையை நீடித்தல்.
நிலுவை வரிப்பணத்தை செலுத்துவதற்காக வரி செலுத்துவோருக்கு ஒரு வருட நிவாரண காலத்தை வழங்குதல்.
வருடாந்தம் வரிப்பணத்தை 4 காலாண்டுகளில் செலுத்துவதற்காக அவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்குதல்.
வருடாந்தம் வரிப்பணம், வரி கால எல்லையில் ஆரம்ப மாதம் நிறைவடைவதற்கு முன்னர் செலுத்தப்பட வேண்டிய வரி செலுத்துவோருக்கு 10 சதவீத கழிவை வழங்குதல்.
தபால் அலுவலகம், கடனட்டை, கையடக்க தொலைபேசி, யுpp போன்ற நடைமுறைகள் மூலம் வரியை செலுத்துவதற்காக வசதிகளைச் செய்து கொடுத்தல்.
15. இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையில் பதிவு செய்யப்பட்டுள்ள சுற்றுலா நிறுவனங்களுக்காக சுற்றுலா அபிவிருத்தி வரியை செலுத்தும் கால எல்லையை நீடித்தல்.
2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரையில் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையில் பதிவு செய்யப்பட்டுள்ள சுற்றுலா நிறுவனங்களினால் செலுத்த வேண்டிய சுற்றுலா அபிவிருத்தி வரியை செலுத்துவதற்காக 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் ஆம் திகதி தொடக்கம் ஒரு வருட கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பின்னர் சுற்றுலாப்பயணிகளின் வருகை எதிர்பார்த்த வகையில் அதிகரிக்கவில்லை என்பதினால் சம்பந்தப்பட்ட நிவாரண காலத்தை மேலும் நீடிப்பது பொருத்தமானது என்பது கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு அமைவாக, சுற்றுலா அபிவிருத்தி வரியை செலுத்துவதற்காக நிவாரண கால எல்லை 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி வரையில் மேலும் 4 மாத காலம் நீடிப்பதற்கும் இந்த காலப்பகுதியில் சம்பந்தப்பட்ட செலுத்தப்படாத சுற்றுலா அபிவிருத்தி வரியை 2020 ஆம் ஆண்டு மே மாதம் முதலாம் ஆம் திகிதி தொடக்கம் நடைமுறைப்படுத்தும் வகையில் பொதுவான 20 தவணைகளில் அறவிடுவதற்கும் சுற்றுலா மற்றும் விமான சேவைகள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
16.மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையம், கொழும்பு, ரத்மலானை சர்வதேச விமான நிலையத்தை விமான நிறுவனங்களை ஈர்ப்பதற்கான வேலைத்திட்டம்.
மத்தள ராஜபக்ஷ விமான நிலையத்தில் சர்வதேச நிரந்தர நேர அட்டவணைக்கு உட்பட்ட விமான சேவைகளை முன்னெடுக்கும் பணிகளை மீண்டும் ஆரம்பித்தல் மற்றும் ரத்மலானை சர்வதேச விமான நிலையத்தில் பிராந்திய செயற்பாடுகளை ஆரம்பிக்கும் நோக்கில் இந்த விமான நிலையங்களை மேம்படுத்துவதற்காக சுற்றுலா மற்றும் விமான சேவைகள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையம்.
மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையம்.
60 அமரிக்க டொலர்களான விமான நிலைய சில விதிவிலக்கு வரி (னுநஎயைவழைளெ) விமான நிலையத்துக்குள் அறவிடுவதை 2 வருட காலத்துக்கு முழுமையாக இடை நிறுத்துதல்.
இந்த விமான நிலையங்களில் வெளியேறும் உபசரிப்பு பணியாளர்களுக்கான கட்டணத்துக்கு கழிவை வழங்குதல்.
இந்த விமான நிலையங்களில் நில செயற்பாட்டு கட்டணத்துக்காக கழிவு வீதத்தை வழங்குதல்.
நிவாரண விலைக்கு விமானத்திற்கு தேவையான எரிபொருளை விநியோகித்தல்.
முன்னேற்றத்தை ஊக்குவித்தலாக ஒரு வருட காலத்துக்கு துணைப்பட்டியல் இடப்பட்ட சர்வதேச விமான நிறுவனங்கள் தரை இறங்கல் மற்றும் விமானங்களை நிறுத்தி வைத்தலுக்கான கட்டணத்தை கைவிடுதல்.
கொழும்பு, ரத்மலானை சர்வதேச விமான நிலையம்
இந்த விமான நிலையங்களில் வெளியேறும் உபசரிப்பு பணியாளர்களுக்கான கட்டணத்துக்கு கழிவை வழங்குதல்.
இந்த விமான நிலையங்களில் நில செயற்பாட்டு கட்டணத்துக்காக கழிவு வீதத்தை வழங்குதல்.
நிவாரண விலைக்கு விமானத்திற்கு தேவையான எரிபொருளை விநியோகித்தல்.
முன்னேற்றத்தை ஊக்குவித்தலாக ஒரு வருட காலத்துக்கு துணைப்பட்டியல் இடப்பட்ட சர்வதேச விமான நிறுவனங்கள் தரை இறங்கல் மற்றும் விமானங்களை நிறுத்தி வைத்தலுக்கான கட்டணத்தை கைவிடுதல்.
கொழும்பு, ரத்மலானை சர்வதேச விமான நிலையம்
ஒரு கால வரையறைக்காக 60 அமெரிக்க டொலர் விமான நிலைய விதிவிலக்கு விரியில் 50 சதவீத்தை அறிவிடுதல்.
நிவாரண விலைக்கு விமானங்களுக்கு தேவையான எரிபொருளை விநியோகித்தல்.
முன்னேற்றத்தை ஊக்குவித்தலாக ஒரு வருட காலத்துக்கு தணை பட்டியலிடப்பட்ட விமான நிறுவனத்துக்கு தரை இறங்குதல் மற்றும் விமானங்களை நிறுத்தி வைத்தல் கட்டணத்தை கைவிடுதல்.
நிவாரண விலைக்கு விமானங்களுக்கு தேவையான எரிபொருளை விநியோகித்தல்.
முன்னேற்றத்தை ஊக்குவித்தலாக ஒரு வருட காலத்துக்கு தணை பட்டியலிடப்பட்ட விமான நிறுவனத்துக்கு தரை இறங்குதல் மற்றும் விமானங்களை நிறுத்தி வைத்தல் கட்டணத்தை கைவிடுதல்.
17. ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் உள்ளுராட்சி மன்ற மேம்படுத்தும் துறைசார்ந்த திட்டத்தின் கீழ் கிராந்துருக் கோட்டை நீர் சுத்திகரிப்பை மேம்படுத்துதல், இயந்திர மற்றும் மின் வேலி தொடர்பான ஒப்பந்தத்தை வழங்குதல்.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் உள்ளுராட்சி மன்ற துறைசார்ந்த திட்டத்தின் கீழ் 46.78 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி, ஊவா, வடமத்திய, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ள பொது மக்கள் வாழும் பிரதேசங்களில் நீர் வழங்கல் திட்டத்தை மேம்படுத்துவதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் கீழ் கிராந்துருக் கோட்டை நீர் சுத்திரகரிப்பை மேம்படுத்துதல், இயந்திரம் மற்றும் மின் வேலி ஒப்பந்தம் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட பெறுகைக் குழுவின் சிபாரிசிற்கு அமைய 330.10 மில்லியன் ரூபாவுக்கு கஹத்துட்டுவ பொல்கஸ்ஒவிட்ட வாசிறி – சாவின்ந்த குழும வியாபாரத்துக்கு வழங்குவதற்காக அரச நிர்வாகம், உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
18.கழிவு பொருட்களை எடுத்து செல்வதற்காக வசதிகளைக் கொண்ட பல்லின சைக்கிள்களை வழங்குதல்.
மக்கள் தொகையை அதிகரித்தல் மற்றும் தற்போது பயன்படுத்தப்படும் நடைமுறையின் காரணமாக பயன்படுத்தப்படும் சுற்றாடலில் எரியப்படும் கழிவு பொருட்களின் அளவு அதிகரித்துள்ளது. கழிவு பொருட்களை எடுத்துச் செல்வதற்காக பயன்படுத்தப்படும் வாகனம் அல்லது ட்ரக்டர் வாகனங்களில் இலகுவாக நெருங்க முடியாததுடன் குறுக்கு பாதையில் கழிவு பொருட்களை ஒன்று சேர்ப்பதற்காக லேன்மாஸ்டர் போன்ற கை இயந்திரங்கள் மூலம் மேற்கொள்ளப்படுகின்றது. தேசிய புத்தாக்க தயாரிப்பாளரான வரையறுக்கப்பட்ட நேசன் ஐ தனியார் நிறுவனத்தினால் இவ்வாறான குறுக்கு பாதைகளில் இலகுவாக பிரவேசிக்கக்கூடிய சுற்றாடல் பாதிப்பை குறைக்கும். 250 – 300 கிலோ கிராம் வரையில் எடுத்துச்செல்லக்கூடிய ‘குறும்பெட்டியா’ என்ற சைக்கிளை தயாரித்துள்ளது. இந்த 10 சைக்கிளை கொள்வனவு செய்யும் உத்தேச திட்டமாக உள்ளுராட்சி மன்ற நிறுவனங்களுக்கு வழங்கி அதன் வெற்றியின் அடிப்படையில் ஏனைய உள்ளுராட்சி மன்ற நிறுவனங்களுக்கு இவ்வாறான சைக்கிள்களை வழங்குவதற்கு ஆலோசிக்கப்பட்டுள்ளது. இதற்கு அமைவாக இவ்வாறான 10 சைக்கிள்களை ஒரு சைக்கிள் 180,000 ரூபா என்ற அடிப்படையில் 1.8 மில்லின் ரூபாவிற்கு கொள்வனவு செய்த மத வழிபாட்டு தலங்கள் மற்றும் தொன்மையான நினைவுச் சின்னங்கள் அமைந்துள்ள உள்ளுராட்சி மன்ற நிறுவனங்களுக்கு வழங்குவதற்காக, அரச நிர்வாகம், உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
19. சுரக்ஷா மாணவர் காப்புறுதி வேலைத்திட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுத்தல்.
19. சுரக்ஷா மாணவர் காப்புறுதி வேலைத்திட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுத்தல்.
ஐந்து வயது தொடக்கம் 19 வயதுக்கு உட்பட்ட அனைத்து பாடசாலை மாணவர்களையும் உள்ளடக்கிய வகையில் தற்பொழுது நடைமுறைப்படுத்தப்படும் சுரக்ஷா காப்புறுதி திட்ட முறையை சுபீட்சமான மாணவர் சமூகம் ஒன்றை உருவாக்குதல் மற்றும் மாணவர்கள் தொடர்ந்தும் பாடசாலைக்கு செல்வதை உறுதி செய்யும் நோக்கில் தொடர்ந்தும் முறையாக நடைமுறைப்படுத்துவதற்கு கல்வி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
20. குறிஞ்சா தீவு (ஆனையிறவு) – வடக்கு உப்பளத்தை அரச – தனியார் பங்குடைமையுடன் மீண்டும் ஆரம்பித்தல்.
20. குறிஞ்சா தீவு (ஆனையிறவு) – வடக்கு உப்பளத்தை அரச – தனியார் பங்குடைமையுடன் மீண்டும் ஆரம்பித்தல்.
கடந்த காலப்பகுதியில் இடம்பெற்ற யுத்த மோதலினால் நிறுத்தப்பட்ட குறிஞ்சா தீவு (ஆனையிறவு) உப்பள தயாரிப்பு மற்றும் நடவடிக்கைகளை மீள ஆரம்பிப்பதற்காக அமைச்சரவையினால் இதற்கு முன்னர் அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்த போதிலும் இதற்கான பணிகள் இதுவரையில் வெற்றியடையவில்லை. இந்த உப்பளத்தை முன்னெடுக்கும் பணிகள் மாந்தை சோல்ட் லிமிட்டட் நிறுவனம் மற்றும் முறையான நடைமுறைகளை கடைப்பிடித்து தெரிவு செய்யப்பட்ட முதலீட்டாளர்கள் மத்தியில் நடைமுறைப்படுத்தப்படும் அரச – தனியார் பங்குடைமை திட்டமொன்றாக ஆரம்பித்து நடைமுறைப்படுத்துவதற்காக கைத்தொழில் மற்றும் விநியோக முகாமைத்துவ அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
21. கண்டி மற்றும் பேராதனைக்கு இடையிலான ரயில் பாதையை இரண்டு நிரல் பாதையாக மேம்படுத்துதல்.
21. கண்டி மற்றும் பேராதனைக்கு இடையிலான ரயில் பாதையை இரண்டு நிரல் பாதையாக மேம்படுத்துதல்.
தற்பொழுது உள்ள கண்டி – பேராதெனிய ரயில் பாதைக்கு அருகாமையில் அமைக்கப்படும் இரட்டை ரயில் பாதை 6.0 கிலோ மீற்றர் நீளத்தை கொண்டுள்ளதுடன், தற்பொழுது கண்டியில் இருந்து கெட்டம்பே ரயில் குறுக்கு பாதை வரையில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது. போக்குவரத்து காலத்தை மேலும் குறைக்கும் நோக்கில் கெட்டம்பே ரயில் குறுக்கு பாதை மற்றும் பல்கலைக்கழக பூங்காவுக்கு இடையில் தற்பொழுது உள்ள ரயில் பாதைக்கு அமைவாக மேம்படுத்தப்பட்ட சமிஞ்ஞை கட்டமைப்புடனான மேலதிக பாதை ஒன்றை ஒன்றிணைக்கப்பட்ட நிதி மானியத்தைப் பயன்படுத்தி நிர்மாணிப்பதற்கும் 00 தம்வெல் 37 மைல் கல் என்ற இடத்தில் மகாவலி நதி ஊடாக பாலம் ஒன்றை நிர்மாணிப்பதற்காகவும் போக்குவரத்து சேவைகள் முகாமைத்துவ அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
22. 2020.04.01 தொடக்கம் 2020.11.30 வரையிலான 8 மாத காலத்திற்குள் (ஆக கூடிய சல்பர் வீதம் 0.05) 1,137,500 பீப்பாய்கள் மற்றும் டீசல் (ஆக கூடிய சல்பர் வீதம் 0.001) 262,500 பீப்பாய்களை இறக்குமதி செய்வதற்காக நீண்ட கால ஒப்பந்தத்தை எட்டுதல்.
2020.04.01 தொடக்கம் 2020.11.30 வரையிலான 8 மாத காலத்திற்குள் (ஆக கூடிய சல்பர் வீதம் 0.05) 1,137,500 பீப்பாய்கள் மற்றும் டீசல் (ஆக கூடிய சல்பர் வீதம் 0.001) 262,500 பீப்பாய்களை இறக்குமதி செய்வதற்காக நீண்ட கால ஒப்பந்தம் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட விசேட நிலையியற் பெறுகைக் குழுவின் சிபாரிசுக்கு அமையM/s Petrochina International Pte. Ltd., Singapore என்ற நிறுவனத்திடம் வழங்குவதற்கு மின் சக்தி மற்றும் எரி சக்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
23.பெரிய வெங்காயத்திற்காக அரசாங்கம் ஆக கூடிய உறுதி செய்யப்பட்ட விலையை முன்னெடுத்ததன் மூலம் பெரிய வெங்காய உற்பத்தியாளர்களின் வருமானத்தை அதிகரித்தல்.
23.பெரிய வெங்காயத்திற்காக அரசாங்கம் ஆக கூடிய உறுதி செய்யப்பட்ட விலையை முன்னெடுத்ததன் மூலம் பெரிய வெங்காய உற்பத்தியாளர்களின் வருமானத்தை அதிகரித்தல்.
‘நாட்டை மேம்படுத்தும் சௌபாக்கிய தொலைநோக்கு’ கொள்கை பிரகடனத்தின் மூலம் பெரிய வெங்காயம் போன்ற பயிர் உற்பத்திக்கான புதிய திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்துவதற்கும் இதனை இறக்குமதி செய்வதற்காக ஒதுக்கீடு செய்யப்படும் ஆக கூடிய வெளிநாட்டு நாணய பயிர் உற்பத்தியை மேற்கொண்டு விவசாயிகளின் வருமானமாக முன்னெடுப்பதற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கு தமது அறுவடைக்கான நியாயமான விலையைப் பெற்றுக்கொடுத்து உற்பத்தித் துறையில் அவர்களை ஊக்குவிப்பதற்காக பெரிய வெங்காயத்தின் நிர்ணய விலையை மேற்கொள்வதற்கும் இந்த உற்பத்திக்கான காணியின் ஆக கூடிய பலனைக் கொண்டதாக பயன்படுத்துவதற்கு பொருத்தமான வேலைத்திட்டம் ஒன்றை தயாரிப்பது அத்தியாவசியமானது என அடையாளம் காணப்பட்டுள்ளது. இதற்கு அமைவாக ஒரு கிலோ பெரிய வெங்காயத்திற்காக தற்பபொழுது வழங்கப்படும் 60.00 ரூபாவான ஆக கூடிய நிர்ணய விலையை 80.00 ரூபா வரையில் அதிகரிப்பதற்கும் பெரிய வெங்காய உற்பத்தி அறுவடையை அதிகரிப்பதன் மூலம் உற்பத்தியை அதிகரிப்பதற்காக மகாவலி விவசாயம், நீரப்பாசனம் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சின் மூலம் விசேட வேலைத்திட்டத்தை துரிதமாக நடைமுறைப்படுத்துவதற்கும் நிதி, பொருளாதாரம் மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சர் என்ற ரீதியில் கௌரவ பிரதமர் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
24. மிலேனியம் சவால்கள் கூட்டுத்தாபனம் (MCC) பொருத்தமான அபிவிருத்தி உடன்படிக்கையை மதிப்பீடு செய்வதற்காக நியமிக்கப்பட்ட கழிவின் இடைக்கால அறிக்கை.
2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 18 ஆம் திகதி அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய மிலேனியம் சவால்கள் கூட்டுத்தாபன திட்டம் தொடர்பில் மதிப்பீடு செய்யப்படவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக அரசாங்கத்திற்கு சிபாரிசுகளை வழங்குவதற்காக பேராசிரியர் லலித்த ஸ்ரீ குணருவான் அவர்களின் தலைமையில் மதிப்பீட்டு குழு ஒன்று நியமிக்கப்பட்டது. கௌரவ பிரதமர் அவர்களிடம் இடைக்கால அறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன் மூலதன வள பற்றாக்குறை மற்றும் கடன் சுமையினால் இலங்கையின் அடிப்படைப் பொருளாதார பாதுகாப்பற்ற முதலீட்டுக்கு தேவையான நிதி வளம் நாட்டின் வெளிநாட்டு கடன் சுமையை அதிகரிக்காமல் விநியோகிக்கக்கூடிய MCC ஆலோசனைக்குள் உள்ளடங்கியிருந்த போதிலும் இந்த வேலைத்திட்டத்தின் கீழ் உத்தேச சில திட்டங்களுக்குள் இலங்கை தேசிய, சமூக மற்றும் பொருளாதார நலன்களுக்கு தவறான அழுத்தங்களை ஏற்படுத்தக்கூடிய சில பிரிவுகள் இடம்பெற்றிருப்பதாக இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதே போன்று உத்தேச உடன்படிக்கை மற்றும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் திட்டத்தைப் போன்று நிலை நிறுத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள நிறுவனத்தின் ஆக்க யாப்பு திருத்த சட்டத்தில் இலங்கை அரசாங்கம் யாப்புக்கும் நாட்டின் சட்ட விதிகளுக்கும் அமைவாக அல்லாத வகையில் இடம்பெறக்கூடிய சரத்து மற்றும் மானியத்தைப் போன்று தேசிய நிதியத்துக்கும் இறையாண்மைக்கும் தேசிய பாதுகாப்புக்கும் பாதகமான அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடிய ஏனைய நிபந்தனைகள் உள்ளடக்கப்பட்டிருப்பதாக மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதனால் இவ்வாறான பாதகமான அம்சங்களுக்கு பொருத்தமான தவறுகளைத் திருத்துதல் மற்றும் பொருத்தமான திருத்தங்களை மேற்கொள்ளுதல் அத்தியாவசியமாவதுடன் இதன் பின்னர் சம்பந்தப்பட்ட ஒப்பந்தம் மற்றும் திட்ட ஆலோசனை குறித்து பொது மக்களின் ஆலோசனைகளை பெற்றுக்கொள்வது அவசியம் மற்றும் பாராளுமன்றத்தின் அனுமதியைப் பெற்றுக்கொள்வது பொருத்தமானது என்பதும் குழுவினால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த விடயங்களை உள்ளடக்கிய குழுவின் இடைக்கால அறிக்கையை அமைச்சரவை அறிந்து கொள்வதற்காக கௌரவ பிரதமர் அவர்களினால் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டதுடன் அமைச்சரவையினால் அதில் குறிப்பிடப்பட்டுள்ள ஆரம்ப தீர்மானங்கள் மற்றும் சிபாரிசுகள் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது.
25. உள்ளுர் இறைவரி திணைக்களத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் வருமான நிர்வாக முகாமைத்துவ தகவல் கட்டமைப்பின் RAMIS 2.0 –B பிரிவின் மென் பொருளை மாற்றுவதற்கான ஒப்பந்தத்தை வழங்குதல்.
வரி நிர்வாக செயற்பாட்டின் அடிப்படை பணிகளை நிறைவேற்றுவதற்கு 2016 ஆம் ஆண்டு தொடக்கம் உள்நாட்டு இறைவரி திணைக்களத்தினால் RAMIS வேலைத்திட்டம் பயன்படுத்தப்படுவதுடன் அதன் மூலம் அரச வங்கி மற்றும் ஏனைய நிறுவனங்களுக்கு உள்நாட்டு இறைவரி திணைக்களத்துடன் இணையத்தள சேவை ஊடாக தொடர்புபடுதல் மற்றும் இடைமுகத்தை ( Interface ) வழங்குவதற்கு சந்தர்ப்பங்கள் வழங்கப்படுகின்றது. புதிய தேசிய வருமான சட்டத்தை விரைவாக நடைமுறைப்படுத்தும் தேவையை கவனத்தில் கொண்டு RAMIS 2.0 – B ஆக மேம்படுத்தப்பட்ட RAMIS 2.0 மென்பொருளில் நிர்மாணப்பகுதியை மாற்றுவதற்கான ஒப்பந்தம், அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட கலந்துரையாடல் இணக்கப்பாட்டு குழுவின் சிபாரிசுக்கு அமைய 15,534,364 டொலர்கள் சிங்கப்பூர் நாணயத்தை Singapore cooperation enterprise (SCE) என்ற நிறுவனத்திடம் வழங்குவதற்கு நிதி பொருளாதாரம் மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சர் என்ற ரீதியில் கௌரவ பிரதமர் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
26. புதிய கொரோனா வைரஸ் (Covit – 19) என்ற திட்டத்திற்குள் ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் கிழக்கு ஆசிய வலயத்தில் வாழும் இலங்கையர்களின் பாதுகாப்பு மற்றும் சேமநலன்களை பாதுகாப்பதற்காக இலங்கை குழுவினால் முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள்.
தற்பொழுது 2700 பேருக்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன் சுமார் 80,000 ற்கு மேற்பட்டோரை நோய் தொற்றுக்குள்ளாக்கிய புதிய கொரோனா வைரஸ் 44 நாடுகளில் பரவியுள்ளது. இந்த நாடுகளில் வாழும் இலங்கையர்கள் எவருக்கும் இந்த வைரஸ் தொற்று ஏற்படவில்லை என்பது தெரியவந்துள்ளதுடன், இந்த நாடுகளில் உள்ள இலங்கை தூதுக்குழுவினரினால் இவர்களின் பாதுகாப்பு மற்றும் சேமநலனுக்காக முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் பதில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அவர்களினால் அமைச்சரவைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்று ஏற்படக்கூடிய நிலைமைகள் தொடர்பில் தவறாது தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடிய வகையில் வெளிநாட்டு தொடர்புகள் அமைச்சரினால் இந்த நடவடிக்கைகள் குறித்து உன்னிப்பான கண்காணிப்பு தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக அமைச்சர் அவர்கள்; சமர்ப்பித்த தகவல்களை அமைச்சரவை கவனத்தில் கொண்டுள்ளது.
27. ஆசிரியர் – அதிபர்கள் சேவையின் சம்பள முரண்பாடுகளை நீக்குதல்.
நீண்டகாலம் நிலவிவரும் ஆசிரியர்கள் அதிபர்கள் மற்றும் கல்வி துறையுடன் தொடர்புபட்ட அனைத்து தொழில் துறையினரின் சம்பளம் மற்றும் சேவை நிலை தொடர்பான பிரச்சினைகளை கவனத்தில் கொண்டு இலங்கை ஆசிரியர் சேவைக்கான அனைத்து சேவைகளையும் ஒன்றிணைத்து சம்பள மற்றும் சேவை யாப்பை வகுத்து பொருத்தமான சம்பள முறை ஒன்றை வகுப்பது அத்தியாவசியம் என்பது சௌபாக்கிய தொலைநோக்கு கொள்கை திட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதற்கு அமைவாக செயற்படும் பொருட்டு தற்பொழுது அமைச்சரவையினால் கொள்கை ரீதியில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருந்த போதிலும், தற்பொழுது ஆசிரியர் அதிபர் சேவையில் உள்ள சம்பள முரண்பாட்டின் காரணமாக ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து கல்வி அமைச்சரினால் அமைச்சரவைக்கு விரிவான வகையில் விடயங்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.
அரச சேவையில் சம்பளம் தொடர்பில் மதிப்பீடுகளை மேற்கொண்டு நிலவும் முரண்பாடுகளை நீக்ககூடிய வகையில் புதிய சம்பள கொள்கை ஒன்றை வகுப்பதற்காக அதிமேதகு ஜனாதிபதி அவர்களினால் சமீபத்தில் தேசிய சம்பள ஆணைக்குழு ஒன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. அத்தோடு இந்த ஆணைக்குழுவின் சிபாரிசுகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவுசெலவு திட்டத்தின் மூலம் நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது. இதற்கு அமைவாக இந்த ஆணைக்குழுவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள சிபாரிசின் மூலம் ஆசிரியர் – அதிபர் சேவையில் தற்பொழுது நிலவும் சம்பள முரண்பாடுகளை நீக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும் என்று அமைச்சரவையினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது