ஹற்றனில் அமைக்கப்படவுள்ள மலையக பல்கலைகழகம் தொடர்பில், சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு அலுவலகத்தில் நேற்று முக்கிய சந்திப்பு இடம்பெற்றது.
அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் இடம்பெற்ற இச்சந்திப்பில், பல்கலைக் கழகத்திற்கான தேவைகள், துரிதமாக முன்னெடுக்கப்பட வேண்டியதன் அவசியம் பற்றி ஆராயப்பட்டது. இக்கலந்துரையாடலில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் பி.பி. தேவராஜ், ஒருங்கிணைப்பாளர் எஸ். ரூபதர்சன், மத்திய மாகாண சபை முன்னாள் உறுப்பினர் கணபதி கனகராஜ், சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் கீழ் இயங்கும் அதிகார சபையின் தலைவர் காந்தி சௌந்தராஜன், இலங்கை இந்திய சமுதாயப் பேரவையின் அங்கத்தவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். நாளை மறுதினம் (29) உயர் கல்வி அமைச்சர் பந்துலகுணவர்தன ஹற்றனுக்கு வருகைதவுள்ளதால் அமைச்சரின் கவனத்திற்கு இவ்விடயத்தைக் கொண்டு செல்வதென்றும் தீர்மானிக்கப்பட்டது.