கடந்த காலங்களில் க.பொ.த உயர் தரம் சித்தி பெற்றிருப்பது அரச தொழில் பெற்றுக் கொள்வதற்கான அடிப்படைத் தகைமையாக கருதப்பட்ட போதிலும் இந்த அரசாங்கத்தின் கீழ் க.பொ.த உயர் தரம் சித்தியடையாதிருப்பது அரச தொழில் பெற்றுக் கொள்வதற்கான தகைமையாக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நேற்று (24) அலரி மாளிகையில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் இடம்பெற்ற காணி உறுதிகளை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இவ்வாறு பெருமை பாராட்டினார்.