சமயப் பாட ஆசிரியர் நியமனத்திற்கான நேர்முகப் பரீட்சைகள் பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி முதல் நடைபெற ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
நேர்முகப் பரீட்சைக்குத் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான அழைப்புக்கடிதங்கள் தபாலிடப்பட்டுள்ள அதே வேளை நேர்முகப் பரீட்சைக்காக தெரிவு செய்யப்பட்டவர்களின் பெயர் விபரங்கள் அடங்கிய பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என கல்வி அமைச்சு வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
சமயப் பாட ஆசிரியர் நியமனத்திற்கான ஆட்சேர்ப்பு பின்வரும் ஒழுங்கில் நடைபெறும் என வர்த்தமானி அறிவித்தலில் விளக்கப்பட்டிருந்தது.
1. எழுத்து மூலப் பரீட்சையின் ஒவ்வொரு பாடத்திலும் 40க்கு குறையாத புள்ளிகள் பெற்று அனைத்து பாடங்களினதும் மொத்தப் புள்ளிகளின் அடிப்படையில் முன்னுரிமைக்கு அமைய தேவையான மொத்த வெற்றிடங்களை விட மூன்று மடங்கு விண்ணப்பதாரிகள் நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்படுவர்.
2. ஆவணங்கள் சரிபார்க்கப்படும் நேர்முகப் பரீட்சையின் பின்னர் பிரயோக நேர்முகப் பரீட்சை நடைபெறும். ஏற்கனவே பெற்ற பரீட்சைப் புள்ளிகள் மற்றும் நேர்முகப் பிரயோகப் பரீட்சைப் புள்ளிகள் ஆகியவற்றைக் கூட்டி அதன் அடிப்படையில் ஒழுங்குபடுத்தப்படும் பட்டியலின் அடிப்படையில் நியமனம் பெற்றுக் கொள்வோர் தெரிவு செய்யப்படுவர்.
உரிய தகைமைகளைப் பூர்த்தி செய்யாத விண்ணப்பதாரிகள் நிராகரிக்கப்படுவர்.
3. வெற்றிடங்கள் காணப்படும் பாடசாலைகள் காட்சிப்படுத்தப்படும். அதில் விண்ணப்பதாரி தமது விருப்பத்தை தொடரொழுங்கில் குறிப்பிட சந்தர்ப்பம் வழங்கப்படும்.
4. இது பாடசாலை மட்டத்தை அடிப்படையாகக் கொண்ட நியமனம் என்பதால் நியமிக்கப்படும் பாடசாலையிலிருந்து இடமாற்றம் 5 வருடங்கள் வரை வழங்கப்படமாட்டாது