SAITM பல்கலைக்கழகத்தை அரசாங்கம் இன்னமும் கையகப்படுத்தவில்லை என்றும், நெவில் பெர்னாண்டோ மருத்துவமனையை கையகப்படுத்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டுள்ளதாகவும் உயர் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
முந்தைய அரசு கையெழுத்திட்ட ஒப்பந்தத்தை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
SAITM பல்கலைக்கழகத்திற்கு மேற்பார்வை பயணமொன்றை மேற்கொண்டு கருத்துத் தெரிவித்த போதே இக்கருத்துக்களை அவர் தெரிவித்துள்ளார்.
SAITM இரண்டு ஆண்டுகளாக மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.