பிபிசியின் பணிப்பாளர் நாயகம் பதவியில் இருந்து ரோனி ஹோல் விலகவுள்ளார்.
7 ஆண்டுகளாக இந்தப் பதவியில் உள்ள ரோனி ஹோல் பிரபு (Tony Hall) தெரிவிக்கையில்:
இந்த முடிவு கடினமானது என்றும் நான் என் இதயத்தைப் பின்பற்றினால் ஒருபோதும் இதிலிருந்து வெளியேற விரும்பமாட்டேன் என்று கூறியுள்ளார்.
மேலும் 2022 ஆம் ஆண்டில் பிபிசியின் இடைக்கால மீளாய்வுக்கும் 2027 ஆம் ஆண்டில் அதன் சாசனத்தைப் புதுப்பிப்பதற்கும் பிபிசி அதே தலைவரைக் கொண்டிருப்பது முக்கியம் என்று அவர் தெரிவித்தார்.
பணிப்பாளர் நாயகத்தின் பதவி விலகல் குறித்து பிபிசி ஊடக ஆசிரியர் அமோல் ராஜன் (Amol Rajan) கூறுகையில்:
ரோனி ஹோல், தேசிய அருங்காட்சியத்தின் (National Gallery) உயர் பதவியைப் பெறவுள்ளார் என்று தெரிவித்தார்.
பிபிசியின் தலைவர் சேர் டேவிட் கிளெமென்ரி (David Clementi) தெரிவிக்கையில்:
அடுத்த பணிப்பாளர் நாயகத்திற்கான தேடல் அடுத்த சில வாரங்களுக்குள் தொடங்கும் என்று கூறியுள்ளார்.
ரோனி ஹோல் பணிப்பாளர் நாயகம் பதவியில் உள்ளமை எங்களது நிறுவனத்துக்குக் கிடைத்த அதிர்ஷ்டம் என்று சேர் டேவிட் கிளெமென்ரி கூறினார்.
பிபிசியை அவர் நேர்மையுடனும் ஆர்வத்துடனும் வழிநடத்திய உத்வேகம் தரும் படைப்பாற்றல்மிக்க தலைவர் என்று புகழாரம் சூட்டினார்.
எனவே இந்தப் பணிக்குத் தகுதிவாய்ந்த நபரைத் தேர்ந்தெடுக்கவேண்டும் என்பது குறித்து பிபிசி உறுதியாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
2016 ஆம் ஆண்டு பிபிசியின் வானொலி மற்றும் கல்வி இயக்குநராகப் பொறுப்பேற்ற, தொழிற்கட்சியின் முன்னாள் அரசியல்வாதியான ஜேம்ஸ் பேர்னெல் (James Purnell) பணிப்பாளர் நாயகம் பதவிக்குப் பொருத்தமானவர் என்று கருதப்படுகின்றது.
பிபிசியின் செய்தி மற்றும் நடப்பு விவகாரங்களின் இயக்குநரான ஃபிரான் அன்ஸ்வேர்த் (Fran Unsworth) மற்றொரு போட்டியாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.