பட்டப் பின் கல்வி டிப்ளோமா பாடநெறிக்கான புதிய மாணவர் அனுமதிக்கான நேர்முகப் பரீட்சை மற்றும் பதிவுகள் எதிர்வரும் டிசம்பர் 16 முதல் இடம் பெறும் என பாடநெறியின் தேசிய இணைப்பாளர் ஷிபான் சாஜஹான் தெரிவித்துள்ளார்.
கிடைக்கப் பெற்றுள்ள விண்ணப்பங்களில் அடிப்படைத் தகைமை கொண்டுள்ளவர்களை உறுதிப்படுத்திய பின்னர் அனைவருக்கும் பாடநெறியைத் தொடருவதற்கான அனுமதி வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கிடைக்கப் பெற்றுள்ள ஆறாயிரத்திற்கும் அதிகமான விண்ணப்பங்களை பரிசீலித்து வருவதாகவும், அடிப்படை தகைமை கொண்ட விண்ணப்பங்கள் தெரிவு செய்யப்பட்டு, அவை குறித்த கற்கை நெறி நடைபெறும் மத்திய நிலையங்களின் இணைப்பாளர்களுக்கு அனுப்பப்பட்டதன் பின்னர், குறிப்பிட்ட மத்திய நிலையங்களிலேயே இந்நேர்முகத் தேர்வுகள் நடைபெற்றும் என்றும் அவர் விபரித்தார்.
அடிப்படை தகைமை பெறாத, மற்றும் உரிய முறையில் விண்ணப்பிக்காதவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டவர்களுக்கு அது தொடர்பாக அறிவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் விபரித்தார்.
இச் செயன்முறை எதிர்வரும் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகள் முடிவு பெற்றதன் பின்னரிலிருந்து ஆரம்பமாகி இம்மாத இறுதிக்குள் நிறைவடையும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.