நேபாளில் நடைபெறவுள்ள தென் ஆசியா விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ளும் இலங்கை வீரர்கள் நேபாளில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகளுக்குத் தோற்றுவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
கல்வி நடவடிக்கைக்காக விளையாட்டை விடுவது அல்லது விளையாட்டுக்காக கல்வி நடவடிக்கைகளை கைவிடுவது என்ற நிலமையை மாற்றி இம்முறை கல்வி அமைச்சு இந்த நடடிக்கையை முன்னெடுத்துள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
நேபாள், கத்மண்டுவில் நடைபெறவுள்ள 13 ஆவது தென் ஆசியா விளையாட்டுப் போட்டிகளில் இலங்கையின் 7 வீரர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். இப்போட்டிகள் டிசம்பர் மாதம் 1 முதல் 10 திகதி வரை நடைபெறவுள்ளன.
எனவே, இம்மாணவர்களுக்கே இந்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
பரீட்சைத் திணைக்களத்தின் இரகசிய கிளையின் சிரேஷ்ட அதிகாரிகள் பரீட்சையை மேற்பார்வை செய்வதோடு நேபாளின் இலங்கைத் தூதரகமும் ஒத்துழைப்பு வழங்குகின்றதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.