இலங்கை கல்வி நிர்வாக சேவை அதிகாரிகள் நாளை பணி பகிஷ்கரிப்பு
ஆசிரியர் அதிபர் சம்பள முரண்பாடு தீர்ந்த கையோடு, அதிலிருந்து தமது பங்கைப் பெற்றுக் கொள்வதற்காக பல்வேறு தொழிற்றுறையுனர் போராட்டங்களை ஆரம்பித்துள்ளனர்.
தாதியர் சங்கங்கள் போராட்டத்திற்குத் தயாராகுவதற்கான ஏற்பாடுகளில் தீவிரம் காட்டும் அதேவேளை, இலங்கை கல்வி நிர்வாக சேவையினர் நாளை அடையாள வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளனர்.
ஆசிரியர்கள் அதிபர் சம்பள அதிகரிப்பின் மூலம் இலங்கை கல்வி நிர்வாக சேவையின் சம்பளம் மற்றும் சம்பள ஏற்றத்தை ஆசிரியர் அதிபர் சேவையினரின் சம்பளம் மற்றும் சம்பள ஏற்றம் அதிகரித்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளனர்.
இதன் மூலம் இத்துறையில் மாபெரும் பிரச்சனைகள் தோற்றம் பெற்றுள்ளதாக குறிப்பிடும் அதேவேளை, ஜனவரி 5 ஆம் திகதி வெளியிடப்பட்ட சுற்றறிக்கை மற்றும் 20 ஆம் திகதி சம்பள் வழங்கப்பட்ட பின்னணியில் அனைத்து தரப்பினரையும் எழுத்து மூலம் மற்றும் வாய்மொழி மூலம் தெளிவுபடுத்தி போதிலும், உரிய தீர்வு கிடைக்காமையால் 26 ஆம் திகதி ஒரு நாள் வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வேலை நிறுத்தத்தை தொடர்ந்து இது, தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு இட்டுச் செல்லலாம் என இலங்கை கல்வி நிர்வாக சேவை உத்தோகத்தர்கள் எச்சரித்துள்ளனர்.