அடையாள அட்டை அச்சிடும் தாள்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளமையினால் க.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கு விசேட அடையாள அட்டை ஒன்றை வழங்குவதற்குத் தீர்மானித்துள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களம் அறிவித்துள்ளது.
ஒரு மில்லியன் தாள்கள் கொள்வனவுக்காக காத்திருப்பினும் அவை இன்னமும் ஆட்பதிவுத் திணைக்களத்திற்கு கிடைக்காமையினால் இந்த மாற்று ஏற்பாட்டை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தற்காலிக அடிப்படையில் வழங்கப்படும் இந்த ஆள் அடையாள அட்டை பரீட்சை எழுதுவதற்கு ஏற்றுக் கொள்ளப்படும் என பரீ்டசைகள் ஆணையாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.