அடுத்த வருடம் தரம் 1 இற்கு மாணவர்களை சேர்த்துக்கொள்வதற்கான தற்காலிக பெயரப்பட்டியல் படசாலைகளில் காட்சிப் படுத்தப்பட்டுள்ளது என்று மேல் மாகாண கல்வி மேலதிக செயலாளர் விமல் குணரத்தின தெரிவித்துள்ளார்.
தற்பொழுது மேன்முறையீட்டு எதிர்ப்பு தெரிவிப்பதற்கான கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதுடன் இந்த காலஎல்லை செவ்வாய் கிழமையுடன் முடிவடைகின்றது. இதேவேளை மேன்முறையீட்டு எதிர்ப்பு தொடர்பான விசாரணை எதிர்வரும் 11 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு 20 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது.
தரம் 1 இற்கு மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்கான இறுதி பட்டியல் எதிர்வரும் டிசம்பர் மாதம் முதலாம் திகதி சகல பாடசாலைகளிலும் காட்சிப்படுத்தப்படவுள்ளது என்றும் மேல் மாகாண கல்வி மேலதிக செயலாளர் விமல் குணரத்தின மேலும் தெரிவித்துள்ளார்.