சப்ரகமுவ பல்கலைக்கழகததின் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை மீண்டும் ஆரம்பிக்கப்பட இருப்பதாக பல்கலைக்கழக பதிவாளர் வி.டி. கித்சிறி தெரிவித்துள்ளார்.
இதற்கமைய பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களினதும் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ளதாகவும் விடுதி வசதி உள்ள அனைத்து மாணவர்களும் எதிர்வரும் 14 ஆம் திகதி பல்கலைக்கழக விடுதிக்கு வருமாறு பல்கலைக்கழக பதிவாளர் கூறினார்