பல்கலைக்கழகங்களின் கல்வி சாரா ஊழியர்கள் மேற்கொண்டிருந்த பணி பகிஷ்கரிப்பை கைவிடுவதாக பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்களின் சங்கம் அறிவித்துள்ளது.
இதன் படி ஒரு மாதத்திற்கும் அதிகமாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்த கல்வி சாரா ஊழியர்கள் திங்கட்கிழமை பணிக்குத் திரும்பவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
இன்று நடைபெற்ற கலந்துரையாடல்களில் சாதகமான முடிவுகள் எட்டப்பட்டதை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.