இலங்கை நிர்வாக சேவையின் பல்வேறு வகுப்பு அதிகாரிகளுக்கும் தற்போது வழங்கப்படும் மேலதிகக் கொடுப்பனவுக்கு பதிலாக 15000 ரூபா மேலதிக பொதுக் கொடுப்பனவை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இன்று மாலை நடைபெற்ற அமைச்சரவையில் அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார சமர்ப்பித்த பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இலங்கை நிர்வாக சேவையின் பல்வேறு வகுப்பினருக்கும் தற்போது 3000, 5000,10000 முதலான கொடுப்பனவு வழங்கப்படுகிறது. இதற்குப் பதிலாக 15000 பொதுக் கொடுப்பனவை வழங்குவதற்கே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இலங்கை நிர்வாக சேவையினர் கோரிக்கைகள் சிலவற்றை முன்வைத்து மேற்கொண்ட தொழில் சங்கப் போராட்டம் தற்போதும் முன்னெடுக்கப்படும் நிலையில் அமைச்சரவை இந்த பிரேரணைக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அரச சேவையின் சம்பள முரண்பாடுகள் தொடர்பாக ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட அமைச்சரவை உப குழு இலங்கை நிர்வாக சேவை தொழில் சங்கங்களுடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகளின் பின்னரே இந்த பிரேரணை அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
எனவே, போராட்டம் வெற்றி பெற்றமையினால் அதிகாரிகள் விரைவில் போராட்டத்தைக் கைவிடுவர் என எதிர்பார்க்கப்படுகின்றது.