புதிதாக அதிபர் சேவைக்கு உள்வாங்கப்பட்டவர்களுக்கான சேவை ஆரம்ப பயிற்சி எதிர்வரும் 2 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
அதிபர் சேவைப் பிரமாணக் குறிப்பின் படி அதிபர் ஒருவர் சேவை ஆரம்பப் பயிற்சியைக் கட்டாயம் பெற்றிருக்க வேண்டும். அதனடிப்படையில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இப்பயிற்சிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள அனைவரும ்கட்டாயம் சமூகமளிக்க வேண்டும் என கல்வி அமைச்சு கேட்டுள்ளது.
ஒக்டோபர் 2 ஆம் திகதி காலை 8.30 மணியளவில் மகரகம தேசிய கல்வியியல் கல்லூரி மற்றும் அதற்கு அருகில் உள்ள மகரகம மத்திய மகா வித்தியாலயம் ஆகியவற்றில் இப்பயிற்சிகள் ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இப்பயிற்சியின் இறுதியில் எழுத்து மற்றும் பிரயோகப் பரீட்சைகள் நடைபெறும். இவற்றில் போதிய புள்ளிகளைப் பெற்றுக் கொள்ளாதவர்கள் அதிபர் சேவைப் பிரமாணக் குறிப்பின்படி, மீண்டும் ஆசிரியர் சேவைக்கு திருப்பி அனுப்பி வைக்கப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலதிக விபரங்கள் தேவைப்படின் 0772309929 என்ற தொலைபேசி இலக்கத்தோடு தொடர்பு கொள்ள முடியும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.