சருமத்தை அழகுபடுத்துவதற்காக பயன்படுத்தப்படும் கிறீம் வகைகள் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று நுகர்வோர் அதிகாரசபை அறிவித்துள்ளது.
தற்போது சந்தையில் உள்ள இவ்வாறான கிறீம் வகைகள் குறிப்பிட்ட அளவிலும் பார்க்க ஆகக் கூடுதலான இரசாயனங்கள் கலக்கப்பட்டுள்ளமை ஆய்வின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரசபை சுட்டிக்காட்டியுள்ளது. தொழில்நுட்ப நிறுவனங்கள் மேற்கொள்ளப்படும் சுமார் ஆயிரம் தயாரிப்புக்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது.
2018ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைவாக சருமத்திற்கு பயன்படுத்தக்கூடிய கிறீம் வகைகளில் இருக்க வேண்டிய ஆகக் கூடிய உலோகத்தின் அளவு குறிப்பிடப்பட்டுள்ளது.
2018ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைவாக சருமத்திற்கு பயன்படுத்தக்கூடிய கிறீம் வகைகளில் இருக்க வேண்டிய ஆகக் கூடிய உலோகத்தின் அளவு குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு அமைவாக, ஒரு கிலோகிராமில் இருக்கக்கூடிய ஆகக்கூடிய இரசாயனத்தின் அளவு ஒரு மில்லிகிராம் ஆகும். இருப்பினும், மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் சருமத்தை அழகுபடுத்துவதற்காக உள்ள கிறீம் வகைகளில் கிலோகிராம் ஒன்றில் 11 ஆயிரம் மில்லி கிராமுக்கும் மேற்பட்ட இரசாயன கலவை அடங்கியிருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
(news.lk)