இலங்கையின் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அங்கீகாரம் பெற்ற இந்தியாவின் பல்கலைக்கழகங்களில் ஆயுர்வேத பட்டக் கற்கையைத் தொடர இருக்கும் அனைவரும் ஆயுர்வேத குறித்த பல்கலைக்கழகங்களில் தம்மைப் பதிவு செய்வதற்கு முன்னர், ஆயுர்வேத வைத்திய சபையில் தம்மை பதிவு செய்ய வேண்டும் என ஆயுர்வேத வைத்திய சபை தீர்மானித்துள்ளதாக உயர் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இதன்படி ஆயுர்வேத வைத்திய சபையில் குறிப்பிட்ட படிவத்தை நிரப்பி ரூபா 500 செலுத்தி தம்மைப் பதிவு செய்ய வேண்டும் என்பதோடு அப்பதிவை வருடாவருடம் இற்றைப் படுத்த வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது. அவ்வாறான நடைமுறையைப் பின்பற்றுபவர்களுக்கே எதிர்காலத்தில் ஆயுர்வேத வைத்திய சபையில் பதிவுகள் மேற்கொள்ள முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நடைமுறை 2019.08.31 முதல் அமுலுக்கு வரும் அதேவேளை, தற்போது கற்கையைத் தொடர்பவர்கள் எதிர்வரும் டிசம்பர் 31 க்கு முன்னர் இப்பதிவை மேற்கொள்ள வேண்டும். பதிவிற்கான மாதிரி விண்ணப்பப் பத்திரம் ஆயுர்வேத வைத்திய சபையின் இணையத்தளத்தில் பெற்றுக் கொள்ள முடியும். இதனை வருடாவருடம் புதுப்பிக்க வேண்டும் என்றும் ஆயுர்வேத வைத்திய சபை கோரியுள்ளது.
மேலதிக தகவல்கள் தேவைப்படுவோர் பின்வருமாறு ஆயுர்வேத வைத்திய சபையைத் தொடர்பு கொள்ள முடியும்.
தொலைபேசி 011 5672905 / 011 5672906
தொலைநகல் 011 2746754
மின்னஞ்சல் – [email protected]
இணையத்தளம் https://www.ayurvedicmedicoun.gov.lk/