உலக அளவில் இதுவரை இல்லாத மிக வெப்பமான மாதம் இந்த ஆண்டின் ஜூலை மாதமென ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த கோப்பர்நிக்கஸ் வானிலை ஆய்வகம் தெரிவித்துள்ளது.
பொதுவாகவே உலக அளவில் ஆண்டின் வெப்பமான மாதம் ஜூலை மாதமாகும்.
ஆனால் இதுவரை பதிவான தகவல்களின்படி கடந்த ஜூலை மாதமே இதுவரை இல்லாத வெப்பம் நிலவிய மிக வெப்பமான மாதம் என்பது தெரியவந்ததாக வானிலை ஆய்வக அறிக்கை குறிப்பிட்டது.
தொடர்ச்சியாக கரியமில வாயுக்கள் வெளியேறி வருவதால், உலக வெப்பநிலை உயர்ந்து வருவதாகவும் அது எதிர்காலத்தில் மேலும் அதிகரிக்கவே செய்யும் என்றும் வானிலை ஆய்வாளர்கள் கூறினர்.
கடந்த மாதம் அதிக வெப்பத்தால் ஐரோப்பாவின் பல நாடுகள் பாதிக்கப்பட்டன.
ஆபிரிக்க, அவுஸ்திரேலியக் கண்டங்களும் கடந்த மாதம் அதிக வெப்பத்தால் பாதிக்கப்பட்டன.
2016ஆம் ஆண்டு ஜூலை மாதத்தோடு ஒப்பிடுகையில் இந்த ஆண்டு ஜூலை மாதம் பூமியின் வெப்பம் 0.04 டிகிரி செல்சியஸ் உயர்ந்துள்ளது.
-Thinakaran-