பாடசாலை விடுமுறைக் காலப்பகுதியில் சுற்றுலா பயணத்தில் ஈடுபடும் பயணிகளுக்காக கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை வரையில் விஷேட ரயில் சேவை இடம்பெறும் என்று ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கு அமைவாக நாளை 6 ஆம் திகதி தொடக்கம் 8,10, 12,14,16,18,20.22,24,26.28,30 ஆகிய திகதிகளிலும் செப்டெம்பர் மாதம் 1 ஆம் திகதி வரையிலும் கொழும்பு கோட்டையில் இருந்து காலை 7.10 க்கு பதுளை நோக்கி செல்லும்.
இதே போன்று நாளை மறுதினம் 7 ஆம் திகதி தொடக்கம் 9, 11, 13, 15, 17, 19, 21, 23, 25, 27, 29, 31 ஆகிய திகதிகளிலும் செப்டெம்பர் மாதம் 2 ஆம் திகதியிலும் பதுளை ரயில் நிலையத்தில் இருந்து கொழும்பு கோட்டை வரையில் காலை 7.30 க்கு புறப்படும்.
இதே போன்று வார இறுதியில் கண்டியில் இருந்து எல்ல ரயில் நிலையம் வரையில் காலை 7.40 க்கு சேவையில் ஈடுபடும் 10.25 இலக்க ரயில் எல்ல ரயில் நிலையத்திலிருந்து கண்டி ரயில் நிலையம் வரையில் பி.ப 2.15 ற்கு சேவையில் ஈடுபடும். இலக்கம் 10.28 என்ற குளிரூட்டி வசதிகளைக் கொண்ட கடுகதி ரயில் 10 ஆம் திகதி தொடக்கம் 14 ஆம் தகிதி வரையில் சேவையில் ஈடுபடும் என்று ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
இதற்கு மேலதிகமாக கண்டி எசல பெரஹரவுக்காக இந்த ரயில் சேவையை பயன்படுத்துவதற்கு பொது மக்களுக்கு வசதிகள் செய்யப்படும்.