பரீட்சைத் திணைக்களத்தின் கட்டடத் தொகுதியை முற்றாக திருத்தி அமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
பரீட்சைத் திணைக்களத்தின் கட்டடத் தொகுதியை பரிசீலித்து அதில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்த வேலைகள் தொடர்பான முழுமையான அறிக்கையொன்றைப் பெற்றுக் கொண்டதன் பின்னர், முன்னுரிமை அடிப்படையில் திணைக்களத்தின் கட்டடத் தொகுதி திருத்த வேலைகள் ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக கல்வி அமைச்சர் சமர்பித்திருந்த பிரேரணைக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.