2019 ஆம் ஆண்டு கல்வி பொது தராதர உயர்தர பரீட்கைளுக்கான அனைத்து கல்வி நடவடிக்கைகளும் இன்று நள்ளிரவு 12 மணி முதல் நிறைவடைவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பி பூஜித தெரிவித்துள்ளார்.
இதே வேளை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான அனைத்து கல்வி நடவடிக்கைகளும் எதிர்வரும் புதன் கிழமை 31 ஆம் திகதி நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடைவதாகவும் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார். இதற்கு அமைவாக மேலதிக வகுப்புக்கள், செயலமர்வுகள் தடை செய்யப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
மாதிரி வினாப் பத்திரத்தை அச்சிடுதல் விநியோகித்தல் பரீட்சை வினாக்களுக்கு விடைகள் வழங்குவதற்கான சுவரொட்டிகள், பதாதைகள், துண்டுபிரசுரம், இலத்திரனியல் மற்றும் அச்சிடுதல் ஊடகம் மூலம் வெளியிடுதல் அல்லது அவ்வாறானவற்றை வைத்திருத்தல் தடை செய்யப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஏதேனும் நிறுவனம் அல்லது நபர் ஒருவர் இந்த விதிமுறைகளை மீறும் பட்சத்தில் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்ற பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.