சைட்டம் மருத்துவ பல்கலைக்கழகத்தில் வைத்திய பட்டம் பெற்ற மாணவர்கள் 82 பேரை மருத்துவ பயிற்சிக்காக பதிவு செய்யுமாறு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலங்கை மருத்துவ சபைக்கு, உச்ச நீதிமன்றம் இன்று (30) இவ்வுத்தரவை பிறப்பித்துள்ளது.
வைத்திய தொழிற்றுறையில் ஈடுபடுவதற்கான வசதியை ஏற்படுத்தும் வகையில், அவர்களை இவ்வாறு பதிவு செய்யுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.