2018/ 2019 கல்வி ஆண்டுகளுக்காக 30 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்களை பல்கலைக்கழகத்திற்கு உள்வாங்குவதற்கான வெட்டுப் புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவpனால் வெளியிடப்பட்டுள்ள வெட்டுப் புள்ளிகளுக்கு அமைய உயிரியல் பீடத்திற்கு 6 ஆயிரத்து 992 மாணவர்களும் பௌதீகவியலுக்காக 5 ஆயிரத்து 864 மாணவர்களும் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.
வணிகத் துறைக்காக 6 ஆயிரத்து 15 பேரும் கலைத்துறைக்காக 9 ஆயிரத்து 339 மாணவர்களும் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.
இது தொடர்பான விபரங்கைள பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் இணையத் தளத்தில் பெற்றுக்கொள்ள முடியும். (News.lk)