சர்வதேச ரீதியில் மாணவர்களின் கணித ஆற்றலை மதிப்பிடும் நீட்டல் சர்வதேச கணிதப் போட்டியில் இம்முறையும் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி மாணவர் குழு ஒன்று கலந்துக்கொள்ளவுள்ளது.
இவர்களுக்கான விமான பயணச்சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. இது தொடர்பான நிகழ்வு கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தலைமையில் நடைபெற்றது.
தென்னாபிரிக்காவின் டேபனில் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி தொடக்கம் ஆறாம் திகதி வரை இந்த போட்டி நடைபெறவுள்ளது.
தென்னாபிரிக்காவின் டேபனில் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி தொடக்கம் ஆறாம் திகதி வரை இந்த போட்டி நடைபெறவுள்ளது.
இந்த போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி 16 மாணவர்கள் அடங்கலாக 19 பேரை கொண்ட குழு ஒன்று கலந்துக் கொள்ளவுள்ளது. 30 நாடுகளை சேர்ந்த மாணவர்கள் கலந்துக்கொள்ளும் இந்த போட்டி 1999 ஆம் ஆண்டு தொடக்கம் தொடர்ச்சியாக வருடந்தோறும் நடைபெற்று வருகின்றது.
இந்த போட்டியில் 2011 ஆம் ஆண்டு தொடக்கம் இலங்கை பங்கு கொண்டு வருகின்றது. பல சந்தரப்பங்களில் மாணவர்கள் பலர் வெற்றிகளை பெற்றுள்ளனர். சர்வதேச கணித போட்டியில் கலந்துக் கொள்வதற்காக கணித பாடத்தில் பாடசாலை மட்டத்தில், மாகாண மட்டத்திலும், தேசிய மட்டத்திலும் தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் மத்தியில் இருந்து சர்வதேச போட்டிக்கு தெரிவு செய்வதற்கு நடத்தப்பட்ட பரீட்சையில் வெற்றி பெற்ற மாணவர்கள் இதில் கலந்துக் கொள்கின்றனர்.
News.lk