5000 ரூபா கொடுப்பனவு இடைநிறுத்தம்
கிழக்கு மாகாண ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கான 5000 ரூபாக் கொடுப்பனவைத் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அரச நிர்வாக சுற்றுநிருபம் 3-2022 இன் படி அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட ரூபா 5000 சம்பள அதிகரிப்பே அவ்வாறு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான தீர்மானம் 18 ஆம் திகதி நடைபெற்ற கணக்காளர்களுக்கிடையிலான கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக அம்பாறை கல்வி வலயத்தின் கணக்காளர் எல். ரி. சாலிஹீன் அறிவித்துள்ளார்.
இந்த 5000 அதிகரிப்பு சம்பள விபரப் பட்டியலில் காண்பித்தாலும் வங்கிக் கணக்கிற்கு வைப்பிலிடப்பட்ட தொகையில் அது காண்பிக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.