கல்வியியல் கல்லூரிகளில் இருந்து கற்பித்தலில் தேசிய டிப்ளோமா சான்றிதழ் பெற்று வெளியாகியுள்ளவர்களுக்கான நியமனம் எதிர்வரும் ஒக்டோபரில் வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு முன்னதாக அறிவித்திருந்தது.
எனினும், மீக நீண்ட காலம் தாமதமாகி குறித்த நியமனங்கள் வழங்குவற்கான திகதி நிர்ணயிக்கப்பட்டமை குறித்து பல்வேறு தரப்பினர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
அண்மையில் ஆசியர் சேவை சங்கத்தின் செயலாளர் மஹிந்த ஜயசிங்க இது குறித்து தமது அதிருப்தியை தெரிவித்தோடு இந்நியமனங்களை விரைவில் வழங்குமாறு கல்வி அமைச்சின் செயலாளரிடம் வேண்டுகோள் விடுத்த்ருந்தார்.
இந்நியமனம் தொடர்பாக பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருப்பினும் இந்நியமனங்கள் ஏற்கனவே திட்டமிட்டதன் படியே வழங்கப்படும் என தெரியவருகின்றது.
இந்நியமனத்திற்கான குறித்து விசாரித்த போது ஒக்டோபர் ஆறாம் திகதி க்கு அண்மித்த தினமொன்றில் ஒக்டோபர் ஆரம்ப வாரத்தில் இந்நியமனங்கள் வழங்கப்படலாம் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.